وَإِذْ قُلْتُمْ يَٰمُوسَىٰ لَن نَّصْبِرَ عَلَىٰ طَعَامٍ وَٰحِدٍ فَٱدْعُ لَنَا رَبَّكَ يُخْرِجْ لَنَا مِمَّا تُنۢبِتُ ٱلْأَرْضُ مِنۢ بَقْلِهَا وَقِثَّآئِهَا وَفُومِهَا وَعَدَسِهَا وَبَصَلِهَا قَالَ أَتَسْتَبْدِلُونَ ٱلَّذِى هُوَ أَدْنَىٰ بِٱلَّذِى هُوَ خَيْرٌ ٱهْبِطُوا۟ مِصْرًا فَإِنَّ لَكُم مَّا سَأَلْتُمْ وَضُرِبَتْ عَلَيْهِمُ ٱلذِّلَّةُ وَٱلْمَسْكَنَةُ وَبَآءُو بِغَضَبٍ مِّنَ ٱللَّهِ ذَٰلِكَ بِأَنَّهُمْ كَانُوا۟ يَكْفُرُونَ بِـَٔايَٰتِ ٱللَّهِ وَيَقْتُلُونَ ٱلنَّبِيِّـۧنَ بِغَيْرِ ٱلْحَقِّ ذَٰلِكَ بِمَا عَصَوا۟ وَّكَانُوا۟ يَعْتَدُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version"மூஸாவே! ஒரே ஓர் உணவை சகிக்கவே மாட்டோம். ஆகவே, உம் இறைவனிடம் எங்களுக்காக பிரார்த்திப்பீராக. பூமி விளைவிக்கும் அதன் கீரை, அதன் வெள்ளரிக்காய், அதன் கோதுமை, அதன் பருப்பு, அதன் வெங்காயத்தை எங்களுக்காக (அவன்) வெளிப்படுத்துவான்" என நீங்கள் கூறிய சமயத்தை நினைவு கூருங்கள். "சிறந்ததற்குப் பதிலாகத் தாழ்ந்ததை மாற்றிக் கொள்கிறீர்களா? ஒரு நகரத்தில் இறங்குங்கள். நீங்கள் கேட்டது நிச்சயமாக உங்களுக்கு உண்டு" எனக் கூறினார். இழிவும் வீழ்ச்சியும் அவர்கள் மீது விதிக்கப்பட்டன. அல்லாஹ்வின் கோபத்திலும் சார்ந்து விட்டார்கள். அது, நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வுடைய வசனங்களை நிராகரிப்பவர்களாகவும், நியாயமின்றி நபிமார்களை கொலை செய்பவர்களாகவும் இருந்த காரணத்தாலாகும். அது, அவர்கள் பாவம் செய்து, வரம்பு மீறுபவர்களாக இருந்த காரணத்தாலாகும்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், “மூஸாவே! ஒரே ஓர் உணவை (மட்டும் சாப்பிட்டு வாழ்வதில்) நாங்கள் அறவே பொறுமையாக இருக்க மாட்டோம். ஆகவே, உம் இறைவனிடம் எங்களுக்காக பிரார்த்திப்பீராக. பூமி விளைவிக்கும் அதன் கீரை, அதன் வெள்ளரிக்காய், அதன் கோதுமை, அதன் பருப்பு, அதன் வெங்காயத்தை எங்களுக்காக அவன் வெளியாக்குவான்” என நீங்கள் கூறியதை நினைவு கூருங்கள். “சிறந்ததற்குப் பதிலாகத் தாழ்ந்ததை மாற்றிக் கொள்கிறீர்களா? ஒரு நகரத்தில் இறங்குங்கள். நீங்கள் கேட்டது நிச்சயமாக உங்களுக்கு (அங்கே) உண்டு” என அவர் கூறினார். இன்னும், இழிவும் வீழ்ச்சியும் அவர்கள் மீது விதிக்கப்பட்டன. அல்லாஹ்வின் கோபத்திலும் அவர்கள் சார்ந்து விட்டார்கள். அது, நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வுடைய வசனங்களை நிராகரிப்பவர்களாகவும், நியாயமின்றி நபிமார்களை கொலை செய்பவர்களாகவும் இருந்த காரணத்தினாலாகும். அது, அவர்கள் பாவம் செய்த காரணத்தினாலும், இன்னும், அவர்கள் (அல்லாஹ்வின் கட்டளையை) மீறுபவர்களாக இருந்த காரணத்தினாலும் ஆகும்.
Tamil Translation - Abdulhamid Baqawi61. ஆனால், (நீங்கள் மூஸாவை நோக்கி) ''மூஸாவே! ஒரே (விதமான) உணவை உட்கொண்டிருக்க எங்களால் முடியாது. பூமியில் விளையக்கூடிய கீரை, வெள்ளரிக்காய், கோதுமை, பருப்பு, வெங்காயம் ஆகியவற்றை அவன் வெளிப்படுத்தித் தரும்படி உமது இறைவனை எங்களுக்காக நீர் கேட்பீராக'' என அவரிடம் கேட்டீர்கள். அதற்கு (மூஸா) ''மேலானதற்குப் பதிலாகத் தாழ்ந்ததை மாற்றிக்கொள்(ள விரும்பு)கிறீர்களா? (அவ்வாறாயின்) நீங்கள் ஏதேனும் ஒரு பட்டணத்தில் இறங்கி விடுங்கள். நீங்கள் கேட்பது நிச்சயமாக (அங்குதான்) உங்களுக்குக் கிடைக்கும்'' என்று கூறிவிட்டார். ஆகவே, வீழ்ச்சியும் இழிவும் அவர்கள் மீது விதிக்கப்பட்டுவிட்டன. அல்லாஹ்வின் கோபத்திலும் (அவர்கள்) சார்ந்து விட்டார்கள். மெய்யாகவே அவர்கள் அல்லாஹ்வுடைய வசனங்களை நிராகரித்ததும், நியாயமின்றி இறைத்தூதர்களைக் கொலை செய்து வந்ததும் இதற்குக் காரணமாகும். இ(வ்வளவு பெரிய குற்றங்களை அவர்கள் செய்யும்படி நேர்ந்த)தற்குக் காரணம்: அவர்கள் (அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு) மாறு செய்தனர். மேலும், வரம்பு மீறிக்கொண்டிருந்தனர்.