caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Baqara அத்தியாயம், வசனம் 60

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 87 · 2:60

وَإِذِ ٱسْتَسْقَىٰ مُوسَىٰ لِقَوْمِهِۦ فَقُلْنَا ٱضْرِب بِّعَصَاكَ ٱلْحَجَرَ فَٱنفَجَرَتْ مِنْهُ ٱثْنَتَا عَشْرَةَ عَيْنًا قَدْ عَلِمَ كُلُّ أُنَاسٍ مَّشْرَبَهُمْ كُلُوا۟ وَٱشْرَبُوا۟ مِن رِّزْقِ ٱللَّهِ وَلَا تَعْثَوْا۟ فِى ٱلْأَرْضِ مُفْسِدِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionமூஸா தனது சமுதாயத்திற்குத் தண்ணீர் தேடிய சமயத்தை நினைவு கூருங்கள். "நீர் உம் தடியால் கல்லை அடிப்பீராக!" எனக் கூறினோம். அதிலிருந்து பன்னிரெண்டு ஊற்றுகள் பீறிட்டன. மக்கள் எல்லாம் தங்கள் குடிக்குமிடத்தை திட்டமாக அறிந்தார்கள். அல்லாஹ்வின் உணவிலிருந்து புசியுங்கள்; பருகுங்கள். பூமியில் விஷமிகளாக இருந்து வரம்பு மீறி விஷமம் செய்யாதீர்கள்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், மூஸா தனது சமுதாயத்திற்குத் தண்ணீர் தேடிய சமயத்தை நினைவு கூருங்கள். “நீர் உம் தடியால் கல்லை அடிப்பீராக!” எனக் கூறினோம். அதிலிருந்து பன்னிரண்டு ஊற்றுகள் பீறிட்டன. மக்கள் எல்லாம் தங்களது நீர் அருந்தும் பகுதியை திட்டமாக அறிந்தார்கள். அல்லாஹ் கொடுத்த உணவிலிருந்து புசியுங்கள்! பருகுங்கள். இன்னும், (பூமியில்) விஷமம் (கலகம், குழப்பம், பாவம்) செய்தவர்களாக இருந்த நிலையில் பூமியில் எல்லை மீறி விஷமம் செய்யாதீர்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi60. மூஸா தன் இனத்தாரு(டன் ‘தீஹ்' என்னும் பகுதிக்குச் சென்ற சமயத்தில் தண்ணீர் கிடைக்காமல் தாகத்தால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த அவர்களுக்)குத் தண்ணீர் தேடியபோது (நாம் அவரை நோக்கி) “நீங்கள் உங்கள் தடியால் இக்கல்லை அடியுங்கள்'' எனக் கூறினோம். (அவர் அவ்வாறு அடித்ததும்) உடனே அதில் இருந்து பன்னிரண்டு ஊற்றுகள் உதித்தோடின. (அவருடைய பன்னிரண்டு பிரிவு) மக்கள் அனைவரும் தாங்கள் அருந்தும் தண்ணீர்த் துறையைத் தெளிவாக அறிந்து கொண்டார்கள். (அப்பொழுது நாம் அவர்களை நோக்கி “உங்களுக்கு) அல்லாஹ் கொடுத்த (‘மன்னு மற்றும் ஸல்வா' என்னும் உணவு பதார்த்தத்)திலிருந்து புசியுங்கள். (கல்லிலிருந்து உதித்தோடும் இந்நீரைப்) பருகுங்கள். ஆனால், பூமியில் கடுமையாக விஷமம் செய்துகொண்டு அலையாதீர்கள்'' (என்று கூறினோம்).
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70