إِنَّ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَٱلَّذِينَ هَادُوا۟ وَٱلنَّصَٰرَىٰ وَٱلصَّٰبِـِٔينَ مَنْ ءَامَنَ بِٱللَّهِ وَٱلْيَوْمِ ٱلْـَٔاخِرِ وَعَمِلَ صَٰلِحًا فَلَهُمْ أَجْرُهُمْ عِندَ رَبِّهِمْ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக நம்பிக்கையாளர்கள், யூதர்கள், கிறித்துவர்கள், ஸாபியிகள் (இவர்களில்) எவர் அல்லாஹ்வையும், இறுதிநாளையும் (உண்மையாகவே) நம்பிக்கை கொண்டு நன்மை செய்தார்களோ, அவர்களுக்கு அவர்களின் கூலி அவர்களின் இறைவனிடத்தில் உண்டு; அவர்கள் மீது பயமுமில்லை; அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.
Tamil Translation - Omar Sharifநிச்சயமாக நம்பிக்கையாளர்கள், யூதர்கள், கிறித்தவர்கள், ஸாபியிகள் - (இவர்களில்) எவர் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் (உண்மையாகவே) நம்பிக்கை கொண்டு நன்மை செய்தார்களோ, அவர்களுக்கு அவர்களின் கூலி அவர்களின் இறைவனிடத்தில் உண்டு. இன்னும், அவர்கள் மீது பயமுமில்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi62. நம்பிக்கை கொண்டவர்களாயினும், யூதர்களாயினும், கிறிஸ்தவர்களாயினும், ஸாபியீன்களாயினும் எவர்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் உண்மையாகவே நம்பிக்கைகொண்டு நற்செயல்களைச் செய்கிறார்களோ அவர்களுடைய கூலி அவர்களுடைய இறைவனிடத்தில் அவர்களுக்கு நிச்சயமாக உண்டு. மேலும், அவர்களுக்கு எவ்விதப் பயமும் இல்லை. அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.