caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Baqara அத்தியாயம், வசனம் 59

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 87 · 2:59

فَبَدَّلَ ٱلَّذِينَ ظَلَمُوا۟ قَوْلًا غَيْرَ ٱلَّذِى قِيلَ لَهُمْ فَأَنزَلْنَا عَلَى ٱلَّذِينَ ظَلَمُوا۟ رِجْزًا مِّنَ ٱلسَّمَآءِ بِمَا كَانُوا۟ يَفْسُقُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅநியாயக்காரர்கள் தங்களுக்குக் கூறப்பட்டது அல்லாத (வேறு) வார்த்தையாக மாற்றி(க் கூறி)னார்கள். எனவே, அவர்கள் பாவம் செய்பவர்களாக இருந்த காரணத்தால் (அந்த) அநியாயக்காரர்கள் மீது வானத்திலிருந்து வேதனையை இறக்கினோம்.
Tamil Translation - Omar Sharifஆக, (அந்த) அநியாயக்காரர்கள் தங்களுக்கு எது கூறப்பட்டதோ அதை வேறு வார்த்தையாக மாற்றி(க் கூறி)னார்கள். எனவே, அவர்கள் (அல்லாஹ்வின் கட்டளையை) மீறுபவர்களாக இருந்த காரணத்தால் (அந்த) அநியாயக்காரர்கள் மீது வானத்திலிருந்து நாம் தண்டனையை இறக்கினோம்.
Tamil Translation - Abdulhamid Baqawi59. ஆனால், வரம்பு மீறிக்கொண்டே வந்த (அ)வர்கள் தங்களுக்குக் கூறப்பட்ட வார்த்தையை மாற்றிவிட்டு கூறப்படாத ஒரு வார்த்தையை (‘ஹின்ததுன்' கோதுமை என்று) கூறினார்கள். அவர்கள் இவ்விதம் (மாற்றிக் கூறி) பாவம் செய்ததனால் வரம்பு மீறிய (அ)வர்கள் மீது வானத்திலிருந்து வேதனையை இறக்கி வைத்தோம்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70