لَا يُكَلِّفُ ٱللَّهُ نَفْسًا إِلَّا وُسْعَهَا لَهَا مَا كَسَبَتْ وَعَلَيْهَا مَا ٱكْتَسَبَتْ رَبَّنَا لَا تُؤَاخِذْنَآ إِن نَّسِينَآ أَوْ أَخْطَأْنَا رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَآ إِصْرًا كَمَا حَمَلْتَهُۥ عَلَى ٱلَّذِينَ مِن قَبْلِنَا رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِۦ وَٱعْفُ عَنَّا وَٱغْفِرْ لَنَا وَٱرْحَمْنَآ أَنتَ مَوْلَىٰنَا فَٱنصُرْنَا عَلَى ٱلْقَوْمِ ٱلْكَٰفِرِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅல்லாஹ் ஓர் ஆன்மாவை அதன் வசதிக்கு மேல் (சக்திக்கு மேல்) சிரமப்படுத்த மாட்டான். அது செய்த (நல்ல)து அதற்கே. அது செய்த(கெட்ட)து அதன் மீதே. எங்கள் இறைவா! நாங்கள் மறந்தால் அல்லது தவறிழைத்தால் எங்களைத் தண்டிக்காதே! எங்கள் இறைவா! எங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது நீ அதைச் சுமத்தியது போன்று எங்கள் மீது கடினமான (ஒப்பந்த) சுமையைச் சுமத்தாதே! எங்கள் இறைவா! எங்களுக்கு அறவே ஆற்றல் இல்லாததை எங்களைச் சுமக்க வைக்காதே! எங்களை விட்டு (பிழைகளை) அழித்தருள்! எங்களுக்கு (எங்கள் குற்றங்களை) மன்னித்தருள்! எங்களுக்கு கருணைபுரி! நீதான் எங்கள் மவ்லா (தலைவன், பொறுப்பாளன், உரிமையாளன், நிர்வகிப்பவன், எஜமானன், பரிபாளிப்பவன், ஆதரவாளன், அரசன்)! ஆகவே நிராகரிக்கும் மக்களுக்கு எதிராக எங்களுக்கு உதவு!
Tamil Translation - Omar Sharifஅல்லாஹ், ஓர் ஆன்மாவை அதன் வசதிக்கு மேல் (-சக்திக்கு மேல்) சிரமப்படுத்த மாட்டான். அது செய்த நல்லது அதற்கே நன்மையாக இருக்கும். இன்னும், அது செய்த கெட்டது அதற்கே பாதகமாக இருக்கும். எங்கள் இறைவா! நாங்கள் மறந்தால் அல்லது தவறிழைத்தால் எங்களைத் தண்டிக்காதே! எங்கள் இறைவா! இன்னும், எங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது நீ அதைச் சுமத்தியது போன்று எங்கள் மீது கடினமான (ஒப்பந்த) சுமையைச் சுமத்தாதே! எங்கள் இறைவா! இன்னும், எங்களுக்கு அறவே ஆற்றல் இல்லாததை எங்களைச் சுமக்க வைக்காதே! இன்னும், எங்களை (பாவங்களை) முற்றிலும் மன்னிப்பாயாக! இன்னும், எங்களுக்கு (எங்கள் குற்றங்களை மறைத்து எங்களை) மன்னித்து விடுவாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீதான் எங்கள் மவ்லா (தலைவன், பொறுப்பாளன், உரிமையாளன், நிர்வகிப்பவன், எஜமானன், பரிபாலிப்பவன், ஆதரவாளன், அரசன்) ஆவாய்! ஆகவே நிராகரிக்கும் மக்களுக்கு எதிராக எங்களுக்கு உதவுவாயாக!
Tamil Translation - Abdulhamid Baqawi286. அல்லாஹ் ஓர் ஆத்மாவை அதன் சக்திக்கு மேல் நிர்ப்பந்திப்பதில்லை. அவை தேடிக் கொண்ட நன்மை அவற்றுக்கே (பயனளிக்கும்). அவை தேடிக்கொண்ட தீமை அவற்றுக்கே (கேடு விளைவிக்கும்). ‘‘எங்கள் இறைவனே! நாங்கள் (எங்கள் கடமைகளைச் செய்ய) மறந்து விட்டாலும் அல்லது அதில் தவறிழைத்துவிட்டாலும் அதைப் பற்றி நீ எங்களை (குற்றம்) பிடிக்காதே! எங்கள் இறைவனே! நீ எங்கள் மீது (கடினமான கட்டளைகளை விதித்து) பளுவான சுமையை சுமத்திவிடாதே. எங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது (கடினமான கட்டளைகளை) நீ சுமத்தியவாறு (சுமத்தாதே!). எங்கள் இறைவனே! நாங்கள் தாங்க முடியாத சிரமங்களை எங்கள் மீது சுமத்திவிடாதே! எங்கள் (குற்றங்களை) அழிப்பாயாக! எங்களை மன்னிப்பாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீதான் எங்கள் பாதுகாவலன்! ஆகவே, (உன்னை) நிராகரிக்கும் கூட்டங்கள் மீது (வெற்றிபெற) நீ எங்களுக்கு உதவி புரிவாயாக!