يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ لَا تُبْطِلُوا۟ صَدَقَٰتِكُم بِٱلْمَنِّ وَٱلْأَذَىٰ كَٱلَّذِى يُنفِقُ مَالَهُۥ رِئَآءَ ٱلنَّاسِ وَلَا يُؤْمِنُ بِٱللَّهِ وَٱلْيَوْمِ ٱلْـَٔاخِرِ فَمَثَلُهُۥ كَمَثَلِ صَفْوَانٍ عَلَيْهِ تُرَابٌ فَأَصَابَهُۥ وَابِلٌ فَتَرَكَهُۥ صَلْدًا لَّا يَقْدِرُونَ عَلَىٰ شَىْءٍ مِّمَّا كَسَبُوا۟ وَٱللَّهُ لَا يَهْدِى ٱلْقَوْمَ ٱلْكَٰفِرِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொள்ளாமல், மக்களுக்கு காட்டுவதற்காகத் தனது செல்வத்தைத் தர்மம் செய்பவனைப் போன்று சொல்லிக் காட்டுவதாலும் துன்புறுத்துவதாலும் உங்கள் தர்மங்களைப் பாழாக்காதீர்கள். அவனின் உதாரணம், அதன் மீது மண் உள்ள வழுக்கைப் பாறையின் உதாரணத்தைப் போன்றாகும். அடை மழை அதை அடைந்தது. அதை(க் கழுவி) வெறும் பாறையாக விட்டுவிட்டது. (இவ்வாறே அவன் செய்த தர்மத்தை அவனின் தீயசெயல் அழித்துவிடும்.) அவர்கள் (தர்மம்) செய்ததில் (நற்கூலி) எதையும் (அடைய) ஆற்றல் பெற மாட்டார்கள். நிராகரிக்கும் கூட்டத்தை அல்லாஹ் நேர்வழி செலுத்த மாட்டான்.
Tamil Translation - Omar Sharifநம்பிக்கையாளர்களே! எவர் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொள்ளாமல், மக்களுக்கு காண்பிப்பதற்காகத் தனது செல்வத்தைத் தர்மம் செய்(து அதன் நன்மையை வீணாக்கிவிடு)கிறாரோ அவரைப் போன்று (நீங்கள் கொடுத்த) உங்கள் தர்மங்க(ளின் நன்மைக)ளை - (அவற்றை) சொல்லிக் காட்டுவதாலும் (தர்மம் பெற்றவரை) துன்புறுத்துவதாலும் - வீணாக்காதீர்கள். (செய்த தர்மத்தின் நன்மையை வீணாக்கிய) அவனின் உதாரணம், ஒரு வழுக்குப்பாறையின் உதாரணத்தைப் போன்றாகும். அதன் மீது மண் (படர்ந்து) இருந்தது. ஆக, அடை மழை அதன் மீது பெய்தது. ஆகவே, அதை(க் கழுவி) வெறும் பாறையாக விட்டுவிட்டது. (இவ்வாறே அவன் செய்த தர்மத்தின் நன்மையை முகஸ்துதியும், சொல்லிக்காட்டுதலும் அழித்துவிடும்.) (இத்தகைய செயலை செய்த) அவர்கள் (தர்மம்) செய்ததில் (நன்மைகள்) எதையும் பெறுவதற்கு ஆற்றல் பெற மாட்டார்கள். (மன முரண்டாக) நிராகரிக்கின்ற மக்களை அல்லாஹ் நேர்வழி செலுத்த மாட்டான்.
Tamil Translation - Abdulhamid Baqawi264. நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பாமல் மக்கள் காண்பதற்காக தன் பொருளை செலவு செய்(து வீணாக்கு)பவனைப் போல (நீங்கள் மனமுவந்து வழங்கும்) உங்கள் தர்மங்களை(ப் பெற்றவனுக்கு முன்னும் பின்னும்) சொல்லி காண்பிப்பதாலும் துன்புறுத்துவதாலும் (அதன் பலனை) பாழாக்கி விடாதீர்கள். இவனின் உதாரணம், ஒரு வழுக்கைப் பாறையை ஒத்திருக்கிறது. அதன் மீது மண்படிந்தது. எனினும், ஒரு பெரும் மழை பொழிந்து, அதை(க் கழுவி) வெறும் பாறையாக்கி விட்டது. (இவ்வாறே அவன் செய்த தானத்தை அவனுடைய பெருமை அழித்துவிடும்.) ஆகவே, அவர்கள் (தானம்) செய்ததில் இருந்து ஒரு பலனையும் (மறுமையில்) அடையமாட்டார்கள். மேலும், அல்லாஹ் (தன்னை) நிராகரிக்கும் கூட்டத்தை (அவர்களின் தீயச் செயல்களின் காரணமாக) நேரான வழியில் செலுத்தமாட்டான்.