caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Baqara அத்தியாயம், வசனம் 263

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 87 · 2:263

قَوْلٌ مَّعْرُوفٌ وَمَغْفِرَةٌ خَيْرٌ مِّن صَدَقَةٍ يَتْبَعُهَآ أَذًى وَٱللَّهُ غَنِىٌّ حَلِيمٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionதுன்புறுத்துவது தொடர்கிற தர்மத்தைவிட நல்ல சொல்லும் மன்னிப்பும் சிறந்ததாகும். அல்லாஹ் மகா செல்வன், பெரும் சகிப்பாளன்.
Tamil Translation - Omar Sharifதுன்புறுத்தல் பின்தொடர்கிற தர்மத்தை விட, (-ஒருவருக்கு தர்மம் செய்துவிட்டு, பிறகு அவரை துன்புறுத்துவதை விட) நல்ல சொல்லும் மன்னிப்பும் சிறந்ததாகும் (-அழகிய முறையில், “இல்லை” என்று சொல்லி அனுப்பிவிடுவதும் தர்மம் கேட்டவர் மீது கோபிக்காமல் மன்னித்துவிடுவதும் சிறந்த நடைமுறையாகும்). அல்லாஹ் மகா செல்வந்தன் (எத்தேவையுமற்றவன்), பெரும் சகிப்பாளன் ஆவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi263. (தர்மம் செய்து அதை வாங்கியவனுக்குத்) துன்பம் தொடரும்(படியாகச் செய்யும்) தர்மத்தைவிட (அன்புடன் கூறும்) இன்சொல்லும், மன்னிப்பும் மிக மேலாகும். அல்லாஹ் எத்தேவையுமற்றவன், மிக்க பொறுமையாளன் ஆவான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70