caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Baqara அத்தியாயம், வசனம் 231

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 87 · 2:231

وَإِذَا طَلَّقْتُمُ ٱلنِّسَآءَ فَبَلَغْنَ أَجَلَهُنَّ فَأَمْسِكُوهُنَّ بِمَعْرُوفٍ أَوْ سَرِّحُوهُنَّ بِمَعْرُوفٍ وَلَا تُمْسِكُوهُنَّ ضِرَارًا لِّتَعْتَدُوا۟ وَمَن يَفْعَلْ ذَٰلِكَ فَقَدْ ظَلَمَ نَفْسَهُۥ وَلَا تَتَّخِذُوٓا۟ ءَايَٰتِ ٱللَّهِ هُزُوًا وَٱذْكُرُوا۟ نِعْمَتَ ٱللَّهِ عَلَيْكُمْ وَمَآ أَنزَلَ عَلَيْكُم مِّنَ ٱلْكِتَٰبِ وَٱلْحِكْمَةِ يَعِظُكُم بِهِۦ وَٱتَّقُوا۟ ٱللَّهَ وَٱعْلَمُوٓا۟ أَنَّ ٱللَّهَ بِكُلِّ شَىْءٍ عَلِيمٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநீங்கள் பெண்களை விவாகரத்து செய்து, அவர்கள் தங்கள் தவணையை அடைந்தால் நல்ல முறையில் அவர்களைத் தடுத்துக் கொள்ளுங்கள். அல்லது நல்ல முறையில் விட்டுவிடுங்கள். நீங்கள் தீங்கிழைத்து (அவர்கள் மீது) அநியாயம் செய்வதற்காக அவர்களைத் தடுக்காதீர்கள். எவர் அதைச் செய்வாரோ திட்டமாக அவர் தனக்கே தீங்கிழைத்தார். அல்லாஹ்வின் வசனங்களை கேலியாக எடுத்துக் கொள்ளாதீர்கள். உங்கள் மீதுள்ள அல்லாஹ்வின் அருளையும் வேதத்திலிருந்தும் ஞானத்திலிருந்தும் உங்கள் மீது அவன் இறக்கியதையும் நினைவுகூருங்கள். அவன் இதன் மூலம் உங்களுக்கு உபதேசிக்கிறான். அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றையும் நன்கறிந்தவன் என்பதை அறியுங்கள்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், நீங்கள் பெண்களை விவாகரத்து செய்து, அவர்கள் தங்கள் (இத்தா முடியும்) தவணையை அடைந்தால் நல்ல முறையில் (மண வாழ்க்கையில்) அவர்களைத் தடுத்துக் கொள்ளுங்கள். அல்லது, (விவாகரத்து செய்து) நல்ல முறையில் விட்டுவிடுங்கள். நீங்கள் தீங்கிழைத்து (அவர்கள் மீது) அநியாயம் செய்வதற்காக அவர்களை (உங்கள் திருமண பந்தத்தில்) தடுத்து வைக்காதீர்கள். எவர் அதைச் செய்வாரோ திட்டமாக அவர் தமக்குத் தாமே தீங்கிழைத்தார். அல்லாஹ்வின் வசனங்களை கேலியாக எடுக்காதீர்கள். இன்னும், உங்கள் மீதுள்ள அல்லாஹ்வின் அருளை நினைவுகூருங்கள்! இன்னும், உங்கள் மீது அவன் இறக்கிய வேதத்தையும் ஞானத்தையும் நினைவில் வையுங்கள்! அவன் இவற்றின் மூலமாக உங்களுக்கு உபதேசிக்கிறான். இன்னும், அல்லாஹ்வை அஞ்சுங்கள். இன்னும், நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றையும் நன்கறிந்தவன் என்பதை அறியுங்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi231. (உங்கள்) மனைவிகளை நீங்கள் (ரஜயியான) தலாக்குக் கூறி, அவர்கள் தங்கள் (இத்தாவின்) தவணையிலிருந்தால் (அத்தவணை முடிவதற்குள்) அவர்களை முறைப்படி (மனைவிகளாகவே) நிறுத்தி வைத்துக் கொள்ளுங்கள். அல்லது (இத்தாவின் தவணையை முடித்துக் கொண்டு) முறைப்படி விட்டுவிடுங்கள். ஆனால், நீங்கள் அநியாயமாகத் துன்புறுத்துவதற்காக அவர்களைத் தடுத்து வைத்துக் கொள்ளாதீர்கள். இவ்விதம் எவரேனும் செய்தால் நிச்சயமாக அவர் தனக்குத்தான்ன தீங்கிழைத்துக் கொண்டவராவார். ஆகவே, அல்லாஹ்வுடைய வசனங்(களில் கூறப்பட்டுள்ள விஷயங்)களைப் பரிகாசமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். உங்கள் மீது அல்லாஹ் புரிந்திருக்கும் அருட்கொடையையும், உங்கள் மீது அவன் இறக்கிய வேதத்தையும், ஞானத்தையும் சிந்தித்து (ஆராய்ந்து) பாருங்கள். அவன் இதைக் கொண்டு உங்களுக்கு உபதேசிக்கிறான். அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் நன்கறிவான் என்பதையும் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70