فَإِن طَلَّقَهَا فَلَا تَحِلُّ لَهُۥ مِنۢ بَعْدُ حَتَّىٰ تَنكِحَ زَوْجًا غَيْرَهُۥ فَإِن طَلَّقَهَا فَلَا جُنَاحَ عَلَيْهِمَآ أَن يَتَرَاجَعَآ إِن ظَنَّآ أَن يُقِيمَا حُدُودَ ٱللَّهِ وَتِلْكَ حُدُودُ ٱللَّهِ يُبَيِّنُهَا لِقَوْمٍ يَعْلَمُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅடுத்து (மூன்றாவதாக) அவளை அவன் விவாகரத்து செய்தால் (அதன்) பிறகு அவள் அவனுக்கு ஆகுமாக மாட்டாள், அவள் அவனல்லாத (வேறு) ஒரு கணவனை மணம் புரியும் வரை. அவனும் அவளை விவாகரத்து செய்தால் அவ்விருவரும் மீளுவது அவ்விருவர் மீதும் குற்றமே இல்லை, அல்லாஹ்வின் சட்டங்களை நிலைநிறுத்துவோம் என்று அவ்விருவரும் எண்ணினால். இவை அல்லாஹ்வின் சட்டங்களாகும். அறியும் மக்களுக்காக அவற்றை விவரிக்கிறான்.
Tamil Translation - Omar Sharifபிறகு, (மூன்றாவது தலாக் கூறி) அவளை அவன் விவாகரத்து செய்தால் (அதன்) பிறகு அவள் அவனுக்கு ஆகுமாக மாட்டாள், அவனல்லாத (வேறு) ஒரு கணவனை அவள் மணம் புரியும் வரை. (அப்படி மணம் புரிந்து, பிறகு) அவனும் அவளை விவாகரத்து செய்தால் (அந்த இத்தா முடிந்தவுடன் முதல் கணவரும் இவளும் இந்த) இருவரும் அல்லாஹ்வின் சட்டங்களை நிலைநிறுத்துவோம் என்று எண்ணினால் இவ்விருவரும் மீண்டும் திருமணம் செய்வது இவ்விருவர் மீது அறவே குற்றமில்லை. இவை அல்லாஹ்வின் சட்டங்களாகும். அறி(ந்து அமல் செய்)யும் மக்களுக்காக அவற்றை அவன் விவரிக்கிறான்.
Tamil Translation - Abdulhamid Baqawi230. (இரண்டு தலாக்குச் சொல்லிய) பின்னர் (மூன்றாவதாகவும்) அவளை அவன் தலாக்குச் சொல்லிவிட்டால் அவனல்லாத (வேறு) கணவனை அவள் மணந்து கொள்ளும் வரை அவள் அவனுக்கு ஆகுமானவளல்ல. (ஆனால், அவனல்லாத வேறொருவன் அவளை திருமணம் செய்து) அவனும் அவளைத் தலாக்குக் கூறிவிட்டால், அதன்பின் (அவளும் முதல் கணவனும் ஆகிய) இருவரும் (சேர்ந்து) அல்லாஹ் ஏற்படுத்திய வரம்பை நிலை நிறுத்திவிடலாம் என்று எண்ணினால் அவர்கள் இருவரும் (திரும்பவும் திருமணம் செய்து கொண்டு மணவாழ்வில்) மீண்டு கொள்வதில் அவர்கள் மீது குற்றமில்லை. இவை அல்லாஹ் ஏற்படுத்திய சட்ட வரம்புகளாகும். அறிந்துகொள்ளும் மக்களுக்காக இவற்றை அவன் விவரிக்கிறான்.