caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Baqara அத்தியாயம், வசனம் 232

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 87 · 2:232

وَإِذَا طَلَّقْتُمُ ٱلنِّسَآءَ فَبَلَغْنَ أَجَلَهُنَّ فَلَا تَعْضُلُوهُنَّ أَن يَنكِحْنَ أَزْوَٰجَهُنَّ إِذَا تَرَٰضَوْا۟ بَيْنَهُم بِٱلْمَعْرُوفِ ذَٰلِكَ يُوعَظُ بِهِۦ مَن كَانَ مِنكُمْ يُؤْمِنُ بِٱللَّهِ وَٱلْيَوْمِ ٱلْـَٔاخِرِ ذَٰلِكُمْ أَزْكَىٰ لَكُمْ وَأَطْهَرُ وَٱللَّهُ يَعْلَمُ وَأَنتُمْ لَا تَعْلَمُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநீங்கள் பெண்களை விவாகரத்து செய்து, அவர்கள் தங்கள் தவணையை (முழுமையாக) அடைந்தால் அவர்கள் தங்கள் கணவர்களை மணப்பதை தடுக்காதீர்கள், அவர்கள் தங்களுக்கு மத்தியில் (ஒருவருக்கொருவர்) திருப்தியடைந்தால். உங்களில் அல்லாஹ்வையும் இறுதிநாளையும் நம்பிக்கை கொண்டிருப்பவர் இதன் மூலம் உபதேசிக்கப்படுகிறார். இதுதான் உங்களுக்கு மிகத் தூய்மையானது; மிகப் பரிசுத்தமானது. அல்லாஹ்தான் அறிவான்; நீங்கள் அறியமாட்டீர்கள்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், நீங்கள் பெண்களை (மூன்றுக்கும் குறைவாக) விவாகரத்து செய்து, அவர்கள் தங்கள் (இத்தா) தவணையை (முழுமையாக) அடைந்தால், (அதன் பின்னர் அந்த பெண்களும் அவர்களின் கணவர்களும் மண வாழ்க்கையில் இணைய விரும்பி) அவர்கள் தங்களுக்கு மத்தியில் (ஒருவர் மற்றவர் மீது) திருப்தியடைந்தால் அப்போது அந்தப் பெண்களை - அவர்கள் தங்கள் (முந்திய) கணவர்களை மணந்து கொள்வதிலிருந்து - (அவர்களின் பொறுப்பாளர்களாகிய) நீங்கள் தடுக்காதீர்கள்! உங்களில் அல்லாஹ்வையும் இறுதிநாளையும் நம்பிக்கை கொண்டிருப்பவர் இதன் மூலம் உபதேசிக்கப்படுகிறார். இதுதான் உங்களுக்கு மிகத் தூய்மையானதும் மிகப் பரிசுத்தமானதுமாகும். அல்லாஹ்தான் அறிவான்; நீங்கள் அறியமாட்டீர்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi232. நீங்கள் ‘தலாக்' கூறிய பெண்கள், தங்கள் (இத்தாவின்) தவணையை முழுமைப்படுத்திவிட்ட பின்னர், அவர்கள் தங்கள் (முந்திய) கணவன்மார்களை (அல்லது தாங்கள் விரும்புகின்ற வேறு ஆண்களை) ஒழுங்கான முறையில் திருமணம் செய்வதை தடுக்காதீர்கள் (திருமணம் செய்து கொள்ள விரும்பும்) அவர்கள் தங்களுக்குள் ஒருவர் மற்றவரை திருப்தி கொண்டால். உங்களில் எவர் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டிருக்கிறாரோ அவர் இதைக் கொண்டு உபதேசிக்கப்படுகிறார். இது உங்களை மிக தூய்மைப்படுத்துவதாகவும், மிக பரிசுத்தமாக்குவதாகவும் இருக்கிறது. (இதிலுள்ள நன்மைகளை) அல்லாஹ்வே அறிவான்; நீங்கள் அறியமாட்டீர்கள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70