لَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَن تَبْتَغُوا۟ فَضْلًا مِّن رَّبِّكُمْ فَإِذَآ أَفَضْتُم مِّنْ عَرَفَٰتٍ فَٱذْكُرُوا۟ ٱللَّهَ عِندَ ٱلْمَشْعَرِ ٱلْحَرَامِ وَٱذْكُرُوهُ كَمَا هَدَىٰكُمْ وَإِن كُنتُم مِّن قَبْلِهِۦ لَمِنَ ٱلضَّآلِّينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநீங்கள் (ஹஜ்ஜில் வியாபாரம் செய்து) உங்கள் இறைவனிடமிருந்து அருளைத் தேடிக்கொள்வது உங்கள் மீது குற்றமில்லை. நீங்கள் அரஃபாவிலிருந்து புறப்பட்டால் ‘அல் மஷ்அருல் ஹராம்‘ அருகில் அல்லாஹ்வை நினைவு கூருங்கள். அவன் உங்களை நேர்வழிப்படுத்தியதற்காக அவனை நினைவு கூருங்கள். நிச்சயமாக இதற்கு முன்னர் நீங்கள் வழி தவறியவர்களில்தான் இருந்தீர்கள்.
Tamil Translation - Omar Sharifநீங்கள் (ஹஜ்ஜில் வியாபாரம் செய்து) உங்கள் இறைவனின் அருளைத் தேடுவது உங்கள் மீது குற்றமில்லை. ஆக, நீங்கள் அரஃபாவிலிருந்து புறப்பட்டால் ‘அல் மஷ்அருல் ஹராம்’ அருகில் (முஸ்தலிஃபாவில் தங்கி) அல்லாஹ்வை நினைவு கூருங்கள். இன்னும், அவன் உங்களை நேர்வழி நடத்தியதற்காக (தக்பீர் கூறி) அவனை நினைவு கூருங்கள். நிச்சயமாக இதற்கு முன்னர் நீங்கள் வழி தவறியவர்களில் இருந்தீர்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi198. (ஹஜ்ஜூ பயணத்தின்போது) நீங்கள் (தொழில் செய்து) உங்கள் இறைவனுடைய அருளை(க் கொண்டு கிடைக்கும் லாபத்தை)த் தேடிக் கொள்வது உங்கள் மீது குற்றமாகாது. (ஹஜ்ஜூக்குச் சென்ற) நீங்கள் அரஃபாவிலிருந்து திரும்பினால் ‘மஷ்அருல் ஹராம்' என்னும் இடத்தில் அல்லாஹ்வை நினைவு கூருங்கள். நீங்கள் இதற்கு முன் வழி தவறியவர்களாக இருந்தபொழுது உங்களுக்கு அவன் நேரான வழியை அறிவித்ததற்காக மேலும், அவனை ‘திக்ரு' செய்யுங்கள்.