ٱلْحَجُّ أَشْهُرٌ مَّعْلُومَٰتٌ فَمَن فَرَضَ فِيهِنَّ ٱلْحَجَّ فَلَا رَفَثَ وَلَا فُسُوقَ وَلَا جِدَالَ فِى ٱلْحَجِّ وَمَا تَفْعَلُوا۟ مِنْ خَيْرٍ يَعْلَمْهُ ٱللَّهُ وَتَزَوَّدُوا۟ فَإِنَّ خَيْرَ ٱلزَّادِ ٱلتَّقْوَىٰ وَٱتَّقُونِ يَٰٓأُو۟لِى ٱلْأَلْبَٰبِ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஹஜ்ஜு அறியப்பட்ட மாதங்களாகும். ஆகவே, அவற்றில் எவர் ஹஜ்ஜை தம் மீது கடமையாக்கினாரோ (அவருக்கு) ஹஜ்ஜில் தாம்பத்திய உறவு அறவே (அனுமதி) இல்லை; தீச்சொல் பேசுதல் அறவே இல்லை; தர்க்கம் அறவே இல்லை. நீங்கள் நன்மையில் எதைச் செய்தாலும் அல்லாஹ் அதை அறிவான். கட்டுச் சாதத்தை எடுத்துக் கொள்ளுங்கள். நிச்சயமாகக் கட்டுச் சாதத்தில் மிகச் சிறந்தது அல்லாஹ்வை அஞ்சுவதுதான். அறிவாளிகளே! நீங்கள் என்னை அஞ்சுங்கள்.
Tamil Translation - Omar Sharifஹஜ்ஜு(க்காக இஹ்ராம் கட்ட வேண்டிய காலம் ஷவ்வால், துல் கஅதா, துல் ஹஜ்ஜுடைய முதல் பத்து நாட்கள் ஆகிய) அறியப்பட்ட மாதங்களாகும். ஆகவே, அவற்றில் எவர் ஹஜ்ஜை தம் மீது கடமையாக்கினாரோ அவர் ஹஜ்ஜில் (இஹ்ராமில் இருக்கும்போது) தாம்பத்திய உறவு அறவே செய்யக் கூடாது; தீச்சொல் பேசுதல் அறவே கூடாது; தர்க்கம் செய்வது அறவே கூடாது. நீங்கள் நன்மையில் எதைச் செய்தாலும் அல்லாஹ் அதை அறிவான். (பயணத்திற்கு தேவையான உணவு தானியம், பொருளாதாரம் போன்ற) கட்டுச் சாதத்தை (உங்களுடன்) எடுத்துக் கொள்ளுங்கள். ஆக, நிச்சயமாகக் கட்டுச் சாதத்தில் மிகச் சிறந்தது தக்வா - அல்லாஹ்வின் அச்சம்தான். இன்னும். நிறைவான அறிவுடையவர்களே! நீங்கள் என்னை அஞ்சுங்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi197. ஹஜ்ஜூ (அதற்கெனக்) குறிப்பிட்ட (ஷவ்வால், துல்கஅதா, துல்ஹஜ்ஜூ ஆகிய) மாதங்களில்தான். ஆகவே, அவற்றில் எவரேனும் (இஹ்ராம் அணிந்து) ஹஜ்ஜை தன்மீது கடமையாக்கிக் கொண்டால் ஹஜ்ஜூ (மாதத்தின் பத்தாம் தேதி) வரை வீடு கூடுதல், தீச்சொல் பேசுதல், சச்சரவு செய்தல் கூடாது. நீங்கள் என்ன நன்மை செய்தபோதிலும் நிச்சயமாக அல்லாஹ் அதை அறி(ந்து அதற்குரிய கூலி தரு)வான். தவிர, (ஹஜ்ஜூடைய பயணத்திற்கு வேண்டிய) உணவுகளை (முன்னதாகவே) தயார்படுத்திக் கொள்ளுங்கள். ஆனால், நிச்சயமாக (நீங்கள்) தயார்படுத்திக்கொள்ள வேண்டியவற்றில் எல்லாம் மிக மேலானது இறையச்சம்தான். ஆதலால், அறிவாளிகளே! நீங்கள் (குறிப்பாக ஹஜ்ஜூடைய காலத்தில்) எனக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள்.