وَمِنْ حَيْثُ خَرَجْتَ فَوَلِّ وَجْهَكَ شَطْرَ ٱلْمَسْجِدِ ٱلْحَرَامِ وَحَيْثُ مَا كُنتُمْ فَوَلُّوا۟ وُجُوهَكُمْ شَطْرَهُۥ لِئَلَّا يَكُونَ لِلنَّاسِ عَلَيْكُمْ حُجَّةٌ إِلَّا ٱلَّذِينَ ظَلَمُوا۟ مِنْهُمْ فَلَا تَخْشَوْهُمْ وَٱخْشَوْنِى وَلِأُتِمَّ نِعْمَتِى عَلَيْكُمْ وَلَعَلَّكُمْ تَهْتَدُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும், (நபியே!) நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் (தொழுகையில்) ‘அல் மஸ்ஜிதுல் ஹராம்' பக்கம் உம் முகத்தைத் திருப்புவீராக. (நம்பிக்கையாளர்களே!) அவர்களில் அநியாயக்காரர்களைத் தவிர (மற்ற) மக்களுக்கு உங்களுக்கு எதிராக எந்த ஆதாரமும் இருக்கக்கூடாது என்பதற்காகவும், என் அருட்கொடையை நான் உங்கள் மீது முழுமைப்படுத்துவதற்காகவும், நீங்கள் நேர்வழி அடைவதற்காகவும் நீங்கள் எங்கிருந்தாலும் ‘அல் மஸ்ஜிதுல் ஹராம்‘ பக்கம் உங்கள் முகங்களைத் திருப்புங்கள். ஆகவே, அவர்களைப் பயப்படாதீர்கள்; என்னைப் பயப்படுங்கள்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், (நபியே!) நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் (தொழுகையில்) ‘அல் மஸ்ஜிதுல் ஹராம்’ பக்கம் உம் முகத்தைத் திருப்புவீராக. இன்னும், (நம்பிக்கையாளர்களே!) - அவர்களில் அநியாயக்காரர்களைத் தவிர (மற்ற) மக்களுக்கு உங்களுக்கு எதிராக எந்த ஆதாரமும் இருக்கக்கூடாது என்பதற்காகவும், என் அருட்கொடையை நான் உங்கள் மீது முழுமைப்படுத்துவதற்காகவும், நீங்கள் நேர்வழி பெறுவதற்காகவும் - நீங்கள் எங்கிருந்தாலும் ‘அல் மஸ்ஜிதுல் ஹராம்‘ பக்கம் உங்கள் முகங்களைத் திருப்புங்கள். ஆக, அவர்களைப் பயப்படாதீர்கள்! என்னைப் பயப்படுங்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi150. (நபியே!) நீர் எங்கு சென்றாலும் (தொழும்போது) ‘மஸ்ஜிதுல் ஹராமின்' பக்கமே உமது முகத்தைத் திருப்புவீராக. (நம்பிக்கையாளர்களே!) அவர்களில் வரம்பு மீறியவர்களைத் தவிர மற்ற மனிதர்கள் உங்களுடன் (வீண்) விவாதம் செய்ய எந்த ஆதாரமும் இருக்கக்கூடாது என்பதற்காக நீங்களும் எங்கிருந்தபோதிலும் ‘மஸ்ஜிதுல் ஹராமின்' பக்கமே உங்கள் முகங்களைத் திருப்புங்கள். ஆகவே, அவர்களுக்கு நீங்கள் பயப்பட வேண்டாம். எனக்கே நீங்கள் பயப்படுங்கள். (கிப்லாவைப் பற்றிய இக்கட்டளையின் மூலம்) என் அருட்கொடையை நான் உங்கள் மீது முழுமையாக்கி வைப்பேன். (அதனால்) நிச்சயமாக நீங்கள் நேரான வழியை அடைவீர்கள்.