كَمَآ أَرْسَلْنَا فِيكُمْ رَسُولًا مِّنكُمْ يَتْلُوا۟ عَلَيْكُمْ ءَايَٰتِنَا وَيُزَكِّيكُمْ وَيُعَلِّمُكُمُ ٱلْكِتَٰبَ وَٱلْحِكْمَةَ وَيُعَلِّمُكُم مَّا لَمْ تَكُونُوا۟ تَعْلَمُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஒரு தூதரை உங்களுக்கு உங்களிலிருந்து நாம் அனுப்பியதற்காக (வும் என்னைப் பயப்படுங்கள்). அவர் உங்கள் மீது நம் வசனங்களை ஓதுகிறார்; உங்களைத் தூய்மைப்படுத்துகிறார்; உங்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்பிக்கிறார்; நீங்கள் அறிந்திருக்காதவற்றையும் உங்களுக்குக் கற்பிக்கிறார்.
Tamil Translation - Omar Sharifஒரு தூதரை உங்களுக்கு உங்களிலிருந்து நாம் அனுப்பியதற்காக(வும் என்னைப் பயப்படுங்கள்). அவர் உங்களுக்கு நம் வசனங்களை ஓதி காண்பிக்கிறார்; உங்களைத் தூய்மைப்படுத்துகிறார்; உங்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்றுக் கொடுக்கிறார்; நீங்கள் அறிந்திருக்காதவற்றை உங்களுக்குக் கற்றுக் கொடுக்கிறார்.
Tamil Translation - Abdulhamid Baqawi151. அவ்வான்ற, உங்களுக்கு நம் வசனங்களை ஓதிக் காண்பித்து உங்களைப் பரிசுத்தமாக்கி வைக்கவும், உங்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்பித்து, நீங்கள் அறியாதவற்றையும் உங்களுக்குக் கற்றுக் கொடுக்கக்கூடிய ஒரு தூதரை உங்களிலிருந்தே நாம் அனுப்பிவைத்தோம்.