caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Baqara அத்தியாயம், வசனம் 102

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 87 · 2:102

وَٱتَّبَعُوا۟ مَا تَتْلُوا۟ ٱلشَّيَٰطِينُ عَلَىٰ مُلْكِ سُلَيْمَٰنَ وَمَا كَفَرَ سُلَيْمَٰنُ وَلَٰكِنَّ ٱلشَّيَٰطِينَ كَفَرُوا۟ يُعَلِّمُونَ ٱلنَّاسَ ٱلسِّحْرَ وَمَآ أُنزِلَ عَلَى ٱلْمَلَكَيْنِ بِبَابِلَ هَٰرُوتَ وَمَٰرُوتَ وَمَا يُعَلِّمَانِ مِنْ أَحَدٍ حَتَّىٰ يَقُولَآ إِنَّمَا نَحْنُ فِتْنَةٌ فَلَا تَكْفُرْ فَيَتَعَلَّمُونَ مِنْهُمَا مَا يُفَرِّقُونَ بِهِۦ بَيْنَ ٱلْمَرْءِ وَزَوْجِهِۦ وَمَا هُم بِضَآرِّينَ بِهِۦ مِنْ أَحَدٍ إِلَّا بِإِذْنِ ٱللَّهِ وَيَتَعَلَّمُونَ مَا يَضُرُّهُمْ وَلَا يَنفَعُهُمْ وَلَقَدْ عَلِمُوا۟ لَمَنِ ٱشْتَرَىٰهُ مَا لَهُۥ فِى ٱلْـَٔاخِرَةِ مِنْ خَلَٰقٍ وَلَبِئْسَ مَا شَرَوْا۟ بِهِۦٓ أَنفُسَهُمْ لَوْ كَانُوا۟ يَعْلَمُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(யூதர்கள்) ஸுலைமானுடைய ஆட்சியில் ஷைத்தான்கள் ஓதியவற்றைப் பின்பற்றினார்கள். ஸுலைமான் நிராகரிக்கவில்லை. எனினும் ஷைத்தான்கள் தான் நிராகரித்தார்கள். (அவர்கள்) மனிதர்களுக்கு சூனியத்தையும் பாபிலோனில் ஹாரூத், மாரூத் (என்ற இரு) வானவர்களுக்கு இறக்கப்பட்டவற்றையும் கற்பித்தார்கள். அவ்விரு(வான)வர்கள், "நாங்களெல்லாம் ஒரு சோதனையாவோம். ஆகவே. (இதைக் கற்று) நிராகரிக்காதே!" என்று கூறும் வரை (அதை) ஒருவருக்கும் கற்றுக் கொடுக்கவில்லை. எனவே, ஆணுக்கும் அவன் மனைவிக்கும் இடையில் எதன் மூலம் பிரிப்பார்களோ அதை அவ்விருவரிடமிருந்து கற்றார்கள். அல்லாஹ்வின் அனுமதி கொண்டே தவிர அதன் மூலம் அவர்கள் ஒருவருக்குமே தீங்கிழைப்பவர்களாக இல்லை. அவர்களுக்குப் பலனளிக்காத, அவர்களுக்குத் தீங்கிழைக்கக்கூடியவற்றைத்தான் (அவர்கள்) கற்றார்கள். அதை எவர் விலைக்கு வாங்கினாரோ அவருக்கு மறுமையில் எந்த பாக்கியமும் இல்லை என்பதை திட்டவட்டமாக (அவர்கள்) அறிந்தார்கள். தங்களையே எதற்கு பகரமாக விற்றார்களோ அது திட்டமாக கெட்டது. (இதை) அவர்கள் அறிந்திருக்க வேண்டுமே!
Tamil Translation - Omar Sharifஇன்னும், (யூதர்கள்) ஸுலைமானுடைய ஆட்சியில் ஷைத்தான்கள் ஓதியவற்றைப் பின்பற்றினார்கள். ஸுலைமான் நிராகரிக்கவில்லை. எனினும் ஷைத்தான்கள்தான் நிராகரித்தார்கள். (அவர்கள்) மனிதர்களுக்கு சூனியத்தையும் பாபிலோனில் ஹாரூத், மாரூத் (என்ற இரு) வானவர்களுக்கு இறக்கப்பட்ட (மந்திரத்)தையும் கற்றுக்கொடுத்தார்கள். அவ்விருவானவர்களோ, “நாங்களெல்லாம் ஒரு சோதனையாவோம். ஆகவே. (இதைக் கற்று) நீ நிராகரிக்காதே!” என்று கூறும் வரை (அதை) (யார்) ஒருவருக்கும் கற்றுக் கொடுக்கவில்லை. ஆக, அவர்கள் ஆணுக்கும் அவன் மனைவிக்கும் இடையில் எதன் மூலம் பிரிவினை உண்டாக்குவார்களோ அதை அவ்விரு(வான)வரிடமிருந்து கற்றார்கள். ஆனால், அல்லாஹ்வின் அனுமதி கொண்டே தவிர அதன் மூலம் அவர்கள் (யார்) ஒருவருக்கும் தீங்கிழைப்பவர்களாக இல்லை. இன்னும், அவர்களுக்குப் பலனளிக்காததை, அவர்களுக்குத் தீங்கிழைக்கக்கூடிய (மந்திரத்)தை அவர்கள் கற்கிறார்கள். இன்னும், அதை எவர் விலைக்கு வாங்கினாரோ அவருக்கு மறுமையில் எந்த பாக்கியமும் இல்லை என்பதை திட்டவட்டமாக (அவர்கள்) அறிந்திருந்தார்கள். அவர்கள் தங்களை எதற்கு பகரமாக விற்றார்களோ அது திட்டமாக கெட்டதாகும். (இதை) அவர்கள் அறிந்திருக்க வேண்டுமே!
Tamil Translation - Abdulhamid Baqawi102. மேலும், (அந்த யூதர்கள்) ஸுலைமானுடைய ஆட்சியைப் பற்றி (அவர்களுக்கு) ஷைத்தான் ஓதிக் (கற்றுக்) கொடுத்திருந்த (சூனியம், மாய மந்திரம் ஆகிய)வற்றைப் பின்பற்றினார்கள். ஆனால், ஸுலைமானோ ‘நிராகரிப்பவராக' இருக்கவில்லை; அந்த ஷைத்தான்கள்தான் உண்மையாகவே நிராகரிப்பவர்களாக இருந்தார்கள். ஏனென்றால், அவர்கள் மனிதர்களுக்கு சூனியத்தையும் ‘பாபிலூன்' (என்னும் ஊரில்) ‘ஹாரூத்' ‘மாரூத்' என்னும் இரு வானவர்களுக்கு இறக்கப்பட்டவற்றையும் கற்றுக்கொடுத்து வந்தார்கள். அவ்விரு வானவர்களோ (அவர்களிடம் சூனியத்தைக் கற்கச்சென்ற மனிதர்களை நோக்கி) ‘‘நாங்கள் சோதனையாக இருக்கிறோம். (இதைக் கற்றால் நீங்கள் நிராகரிப்பவர்களாகி விடுவீர்கள். ஆதலால், இதைக் கற்று) நீங்கள் நிராகரிப்பவர்களாகிவிட வேண்டாம் என்று கூறும்வரை அவர்கள் அதை ஒருவருக்கும் கற்றுக் கொடுப்பதேயில்லை, (இவ்விதம் கூறிய பின்னும் இதைக் கற்க விரும்பியவர்கள்) கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் பிரிவினை உண்டு பண்ணக்கூடிய வழியை அவர்களிடமிருந்து கற்றுக் கொள்வார்கள். அல்லாஹ்வின் கட்டளையின்றி அதன் மூலம் அவர்கள் ஒருவருக்குமே தீங்கிழைத்திட முடியாது. அவர்களுக்கு ஒரு பலனுமளிக்காமல் தீங்கிழைக்கக்கூடியது எதுவோ அதைத்தான் அவர்கள் கற்றுக் கொள்கிறார்கள். (இறை நம்பிக்கைக்குப் பதிலாக) அ(ச் சூனியத்)தை எவன் விலைக்கு வாங்கிக் கொண்டானோ அவனுக்கு மறுமையில் ஒரு பாக்கியமும் இல்லை என்பதைத் தெளிவாக சந்தேகமற அவர்களும் அறிந்திருக்கிறார்கள். தங்களையே விற்று அவர்கள் எதை வாங்கிக் கொண்டார்களோ அது நிச்சயமாக (மிகக்) கெட்டது. (இதை) அவர்கள் அறிந்துகொள்ள வேண்டுமே!
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70