وَلَمَّا جَآءَهُمْ رَسُولٌ مِّنْ عِندِ ٱللَّهِ مُصَدِّقٌ لِّمَا مَعَهُمْ نَبَذَ فَرِيقٌ مِّنَ ٱلَّذِينَ أُوتُوا۟ ٱلْكِتَٰبَ كِتَٰبَ ٱللَّهِ وَرَآءَ ظُهُورِهِمْ كَأَنَّهُمْ لَا يَعْلَمُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்களிடமுள்ள (வேதத்)தை உண்மைப்படுத்தக்கூடிய ஒரு தூதர் அல்லாஹ்விடமிருந்து அவர்களிடம் வந்தபோது, வேதம் கொடுக்கப்பட்டவர்களில் ஒரு பிரிவினர் அல்லாஹ்வுடைய (இந்த) வேதத்தை - அவர்கள் அறியாதது போல் - தங்கள் முதுகுகளுக்குப் பின்னால் எறிந்தார்கள்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், அவர்களிடமுள்ள (வேதத்)தை உண்மைப்படுத்தக்கூடிய ஒரு தூதர் அல்லாஹ்விடமிருந்து அவர்களிடம் வந்தபோது, வேதம் கொடுக்கப்பட்டவர்களில் ஒரு கூட்டம் அல்லாஹ்வுடைய (இந்த) வேதத்தை (நம்பிக்கை கொள்ளாமல் அதை) - அவர்கள் அறியாதது போல் - தங்கள் முதுகுகளுக்குப் பின்னால் எறிந்தார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi101. அல்லாஹ்விடமிருந்து தூதர் ஒருவர் அவர்களிடம் வந்து அவர்களிடமுள்ள (வேதத்)தை உண்மைப்படுத்தியபோதிலும், (முந்திய) வேதம் வழங்கப்பட்ட (அ)வர்களில் பலர் அல்லாஹ்வுடைய (இந்த) வேதத்தையே தாங்கள் அறியாதது போல் தங்கள் முதுகுக்குப் பினோல் தூக்கிப்போட்டு விடுகின்றனர்.