caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Baqara அத்தியாயம், வசனம் 103

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 87 · 2:103

وَلَوْ أَنَّهُمْ ءَامَنُوا۟ وَٱتَّقَوْا۟ لَمَثُوبَةٌ مِّنْ عِندِ ٱللَّهِ خَيْرٌ لَّوْ كَانُوا۟ يَعْلَمُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக அவர்கள் (இவ்வேதத்தை) நம்பிக்கை கொண்டு (சூனியத்தை விட்டு விலகி) அல்லாஹ்வை அஞ்சினால் அல்லாஹ்விடமிருந்து(அவர்களுக்கு) கிடைக்கும் சன்மானம் திட்டமாக மிகச் சிறந்ததாகும். (இதை) அவர்கள் அறிந்திருக்க வேண்டுமே!
Tamil Translation - Omar Sharifஇன்னும், நிச்சயமாக அவர்கள் (இவ்வேதத்தை) நம்பிக்கை கொண்டு, அல்லாஹ்வை அஞ்சி (சூனியத்தை விட்டு விலகி) இருந்தால் அல்லாஹ்விடமிருந்து (அவர்களுக்கு) கிடைக்கும் சன்மானம் திட்டமாக மிகச் சிறந்ததாகும். (இதை) அவர்கள் அறிந்திருக்க வேண்டுமே!
Tamil Translation - Abdulhamid Baqawi103. ஆகவே, அவர்கள் (இவ்வேதத்தை) நம்பிக்கை கொண்டு, (அச்சூனியங்களை விட்டு) விலகிக்கொண்டால் (அவர்களுக்கு) அல்லாஹ்விடம் கிடைக்கும் சன்மானம் நிச்சயமாக மிக மேலானதாயிருக்கும். (இதை) அவர்கள் அறிந்துகொள்ள வேண்டுமே!
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70