caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-A'raaf அத்தியாயம், வசனம் 43

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 39 · 7:43

وَنَزَعْنَا مَا فِى صُدُورِهِم مِّنْ غِلٍّ تَجْرِى مِن تَحْتِهِمُ ٱلْأَنْهَٰرُ وَقَالُوا۟ ٱلْحَمْدُ لِلَّهِ ٱلَّذِى هَدَىٰنَا لِهَٰذَا وَمَا كُنَّا لِنَهْتَدِىَ لَوْلَآ أَنْ هَدَىٰنَا ٱللَّهُ لَقَدْ جَآءَتْ رُسُلُ رَبِّنَا بِٱلْحَقِّ وَنُودُوٓا۟ أَن تِلْكُمُ ٱلْجَنَّةُ أُورِثْتُمُوهَا بِمَا كُنتُمْ تَعْمَلُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்களுடைய நெஞ்சங்களில் இருந்த குரோதத்தை நீக்கி விடுவோம். அவர்களுக்குக் கீழ் நதிகள் ஓடும். இதை அடைவதற்கு எங்களை நேர்வழிபடுத்திய அல்லாஹ்வுக்கே புகழ் (அனைத்தும்) உரியது. அல்லாஹ் எங்களை நேர்வழி செலுத்தி இருக்கவில்லையென்றால் நாங்கள் நேர்வழி பெற்றிருக்க மாட்டோம். எங்கள் இறைவனின் தூதர்கள் திட்டவட்டமாக உண்மையை கொண்டு வந்தார்கள் என்று (அவர்கள்) கூறுவார்கள். “இந்த சொர்க்கம், நீங்கள் (நன்மைகள்) செய்து கொண்டிருந்ததனால் அதற்கு வாரிசாக்கப்பட்டீர்கள்” என்று கூறி அழைக்கப்படுவார்கள்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், அவர்களுடைய நெஞ்சங்களில் இருந்த குரோதத்தை நீக்கி விடுவோம். அவர்களுக்குக் கீழ் நதிகள் ஓடும். “இவற்றை அடைய எங்களுக்கு நேர்வழிகாட்டிய அல்லாஹ்வுக்கே புகழ் (அனைத்தும்) உரியது. இன்னும், அல்லாஹ் எங்களை நேர்வழி நடத்தி இருக்கவில்லையென்றால் நாங்கள் நேர்வழி பெற்றிருக்க மாட்டோம். எங்கள் இறைவனின் தூதர்கள் திட்டவட்டமாக உண்மையை கொண்டுவந்தார்கள்” என்று (அவர்கள்) கூறுவார்கள். இன்னும், “நீங்கள் செய்து கொண்டிருந்த அமல்களுக்கு பகரமாக நீங்கள் வாரிசுகளாக ஆக்கப்பட்ட சொர்க்கம் இதுதான்” என்று (நற்செய்தி கூறப்பட்டு அவர்கள்) அழைக்கப்படுவார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi43. (இவ்வுலகில் ஒருவரைப்பற்றி மற்றவருக்கு இருந்த) குரோதத்தையும் அவர்களுடைய உள்ளங்களிலிருந்து நீக்கி விடுவோம். (ஆகவே, ஒருவருக்கொருவர் மிக நெருங்கிய தோழர்களாகி விடுவார்கள்.) அவர்(களுடைய பாதங்)களுக்கு அருகில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும். அவர்கள் ‘‘இந்த (சொர்க்கத்தை அடையக்கூடிய) நேரான வழியில் எங்களை செலுத்திய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் உரித்தாகும். இவ்வழியில் அல்லாஹ் எங்களை செலுத்தியிருக்காவிட்டால் நிச்சயமாக நாங்கள் (இதை) அடைந்திருக்கவே மாட்டோம். எங்கள் இறைவனின் தூதர்கள் (சந்தேகமற) சத்திய (மார்க்க)த்தையே (எங்களுக்குக்) கொண்டு வந்(து அறிவித்)தார்கள்'' என்று கூறுவார்கள். (அதற்குப் பிரதியாக) ‘‘பூமியில் நீங்கள் செய்து கொண்டிருந்த (நன்மையான) காரியங்களின் காரணமாகவே இந்த சொர்க்கத்திற்கு நீங்கள் வாரிசாக ஆக்கப்பட்டுள்ளீர்கள்'' என்ற சப்தத்தை அவர்கள் கேட்பார்கள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70