وَنَادَىٰٓ أَصْحَٰبُ ٱلْجَنَّةِ أَصْحَٰبَ ٱلنَّارِ أَن قَدْ وَجَدْنَا مَا وَعَدَنَا رَبُّنَا حَقًّا فَهَلْ وَجَدتُّم مَّا وَعَدَ رَبُّكُمْ حَقًّا قَالُوا۟ نَعَمْ فَأَذَّنَ مُؤَذِّنٌۢ بَيْنَهُمْ أَن لَّعْنَةُ ٱللَّهِ عَلَى ٱلظَّٰلِمِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version“எங்கள் இறைவன் எங்களுக்கு வாக்களித்ததை நாங்கள் உண்மையில் பெற்றுக் கொண்டோம்; உங்கள் இறைவன் உங்களுக்கு வாக்களித்ததை உண்மையில் பெற்றீர்களா?” என்று (கூறி) சொர்க்கவாசிகள் நரகவாசிகளை அழைப்பார்கள். (அதற்கு நரகவாசிகள்) “ஆம்!” என்று கூறுவார்கள். ஆகவே, அவர்களுக்கு மத்தியில் ஓர் அறிவிப்பாளர், “நிச்சயமாக அல்லாஹ்வின் சாபம் அநியாயக்காரர்கள் மீது நிலவட்டும் என அறிவிப்பார்!”
Tamil Translation - Omar Sharif“எங்கள் இறைவன் எங்களுக்கு வாக்களித்ததை நாங்கள் உண்மையாக பெற்றுக் கொண்டோம். ஆக, உங்கள் இறைவன் உங்களுக்கு வாக்களித்ததை உண்மையாக நீங்கள் பெற்றீர்களா?” என்று (கூறி) சொர்க்கவாசிகள் நரகவாசிகளை அழைப்பார்கள். (அதற்கு நரகவாசிகள்) “ஆம்!” என்று கூறுவார்கள். ஆகவே, அவர்களுக்கு மத்தியில் ஓர் அறிவிப்பாளர், “நிச்சயமாக அல்லாஹ்வின் சாபம் அநியாயக்காரர்கள் மீது நிலவட்டும்” என அறிவிப்பார்!
Tamil Translation - Abdulhamid Baqawi44. (அந்நாளில்) சொர்க்கவாசிகள் நரகவாசிகளை நோக்கி, ‘‘எங்கள் இறைவன் எங்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிச்சயமாக நாங்கள் பெற்றுக் கொண்டோம்; நீங்களும் உங்கள் இறைவன் உங்களுக்கு அளித்த வாக்குறுதிகளை உண்மையாகவே பெற்றுக் கொண்டீர்களா?'' என்று (சப்தமிட்டுக்) கேட்பார்கள். அதற்கவர்கள் ‘‘ஆம்! (பெற்றுக் கொண்டோம்)'' என்று கூறுவார்கள். அது சமயம் அவர்களுக்கு மத்தியில் ஒரு முனாதி (அறிவிப்பாளர்) கூறுவார்: ‘‘நிச்சயமாக அல்லாஹ்வுடைய சாபம் (வரம்பு மீறிய) அநியாயக்காரர்கள் மீது உண்டாவதாக!''