caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-A'raaf அத்தியாயம், வசனம் 42

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 39 · 7:42

وَٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ لَا نُكَلِّفُ نَفْسًا إِلَّا وُسْعَهَآ أُو۟لَٰٓئِكَ أَصْحَٰبُ ٱلْجَنَّةِ هُمْ فِيهَا خَٰلِدُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஓர் ஆன்மாவை (அதற்கு நாம் சட்டம் கொடுத்து) சிரமப்படுத்த மாட்டோம் அதன் சக்திக்குத் தக்கவாறே தவிர. நம்பிக்கை கொண்டு நன்மைகளைச் செய்தவர்கள்தான் சொர்க்கவாசிகள். அவர்கள் அதில் நிரந்தரமானவர்கள்.
Tamil Translation - Omar Sharifஓர் ஆன்மாவை அதன் சக்திக்குத் தக்கவாறே தவிர (அதன் மீது சட்டங்களை சுமத்தி) சிரமப்படுத்த மாட்டோம். எவர்கள் நம்பிக்கை கொண்டு, நன்மைகளைச் செய்தார்களோ அவர்கள்தான் சொர்க்கவாசிகள். அவர்கள் அதில் நிரந்தரமாக தங்கி இருப்பார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi42. எவர்கள் நம்பிக்கை கொண்டு (தங்களால் இயன்றவரை) நற்காரியங்களைச் செய்கிறார்களோ அவர்களில் ஒருவரையும் அவரது சக்தியின் அளவுக்கதிகமாக நாம் நிர்ப்பந்திப்பதேயில்லை. இவர்கள் தான் சொர்க்கவாசிகள். அதில் அவர்கள் (என்றென்றும்) தங்கிவிடுவார்கள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70