يَسْـَٔلُونَكَ عَنِ ٱلسَّاعَةِ أَيَّانَ مُرْسَىٰهَا قُلْ إِنَّمَا عِلْمُهَا عِندَ رَبِّى لَا يُجَلِّيهَا لِوَقْتِهَآ إِلَّا هُوَ ثَقُلَتْ فِى ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ لَا تَأْتِيكُمْ إِلَّا بَغْتَةً يَسْـَٔلُونَكَ كَأَنَّكَ حَفِىٌّ عَنْهَا قُلْ إِنَّمَا عِلْمُهَا عِندَ ٱللَّهِ وَلَٰكِنَّ أَكْثَرَ ٱلنَّاسِ لَا يَعْلَمُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே! இறுதி நாளின்) நேரத்தைப் பற்றி அது நிகழ்வது எப்போது? என உம்மிடம் கேட்கிறார்கள். கூறுவீராக: அதன் அறிவு எல்லாம் என் இறைவனிடத்தில்தான் இருக்கிறது. அதை அதன் நேரத்தில் அவனைத் தவிர (யாரும்) வெளிப்படுத்த மாட்டான். அது வானங்களிலும் பூமியிலும் கனத்து விட்டது. திடீரென்றே தவிர (அது) உங்களிடம் வராது. நிச்சயமாக நீர் அதைப் பற்றி அறிந்தவர் போன்று உம்மிடம் அவர்கள் கேட்கிறார்கள். கூறுவீராக: “அதன் அறிவெல்லாம் அல்லாஹ்விடம் இருக்கிறது. என்றாலும் மக்களில் அதிகமானோர் (இதை) அறிய மாட்டார்கள்.”
Tamil Translation - Omar Sharif(நபியே!) மறுமையைப் பற்றி அது நிகழ்வது எப்போது? என உம்மிடம் கேட்கிறார்கள். கூறுவீராக: “அதன் அறிவு எல்லாம் என் இறைவனிடம்தான் இருக்கிறது. அதற்குரிய நேரத்தில் அதை அவன்தான் வெளிப்படுத்துவான். அது, வானங்களிலும் பூமியிலும் (யாராலும் அதை அறியமுடியாதவாறு) கனத்து விட்டது (-மறைவாக இருக்கிறது). திடீரென்றே தவிர (அது) உங்களிடம் வராது. நிச்சயமாக நீர் அதைப் பற்றி அறிந்தவர் போன்று உம்மிடம் அவர்கள் கேட்கிறார்கள். (நபியே!) கூறுவீராக: “அதன் அறிவெல்லாம் அல்லாஹ்விடம் இருக்கிறது. என்றாலும், மக்களில் அதிகமானோர் (மறுமையின் அறிவு அல்லாஹ்விடம்தான் இருக்கிறது என்பதை) அறிய மாட்டார்கள்.”
Tamil Translation - Abdulhamid Baqawi187. (நபியே!) இறுதி நாளைப் பற்றி - அது எப்பொழுது வரும் என அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள். (அதற்கு) நீர் கூறுவீராக: ‘‘அதன் அறிவு என் இறைவனிடத்தில்தான் இருக்கிறது. அது வரும் நேரத்தை அவனைத் தவிர மற்றெவரும் தெளிவாக்க முடியாது. (அது சமயம்) வானங்களிலும் பூமியிலும் மகத்தான சம்பவங்கள் நிகழும். திடீரென்றே தவிர (அது) உங்களிடம் வராது. அதை முற்றிலும் அறிந்து கொண்டவராக உம்மை அவர்கள் எண்ணி, (அதைப் பற்றி) உம்மிடம் கேட்கிறார்கள். (அதற்கு) நீர் கூறுவீராக: ‘‘அதன் அறிவு அல்லாஹ்விடத்தில்தான் இருக்கிறது; மனிதரில் பெரும்பாலானவர்கள் இதை அறிய மாட்டார்கள்.''