مَن يُضْلِلِ ٱللَّهُ فَلَا هَادِىَ لَهُۥ وَيَذَرُهُمْ فِى طُغْيَٰنِهِمْ يَعْمَهُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஎவரை அல்லாஹ் வழிகெடுப்பானோ அவரை நேர்வழி செலுத்துபவர் அறவே இல்லை. அ(த்தகைய)வர்களை அவர்களுடைய அட்டூழியத்தில் கடுமையாக அட்டூழியம் செய்பவர்களாக விட்டுவிடுகிறான்.
Tamil Translation - Omar Sharifஎவரை அல்லாஹ் வழிகெடுப்பானோ அவரை நேர்வழி செலுத்துபவர் அறவே இல்லை. இன்னும், அ(த்தகைய)வர்களை அவர்களுடைய அட்டூழியத்தில் கடுமையாக அட்டூழியம் செய்பவர்களாக (சில காலம் வரை) அவன் விட்டுவைக்கிறான்.
Tamil Translation - Abdulhamid Baqawi186. எவர்களை அல்லாஹ் தவறான வழியில் விட்டு விடுகிறானோ அவர்களை நேரான வழியில் செலுத்த ஒருவராலும் முடியாது; அவர்கள் தங்கள் வழிகேட்டிலேயே தட்டழி(ந்து கெட்டலை)யும்படி விட்டுவிடுகிறான்.