وَهُوَ ٱلَّذِىٓ أَنشَأَ جَنَّٰتٍ مَّعْرُوشَٰتٍ وَغَيْرَ مَعْرُوشَٰتٍ وَٱلنَّخْلَ وَٱلزَّرْعَ مُخْتَلِفًا أُكُلُهُۥ وَٱلزَّيْتُونَ وَٱلرُّمَّانَ مُتَشَٰبِهًا وَغَيْرَ مُتَشَٰبِهٍ كُلُوا۟ مِن ثَمَرِهِۦٓ إِذَآ أَثْمَرَ وَءَاتُوا۟ حَقَّهُۥ يَوْمَ حَصَادِهِۦ وَلَا تُسْرِفُوٓا۟ إِنَّهُۥ لَا يُحِبُّ ٱلْمُسْرِفِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionகொடிகள் நிறைந்த தோட்டங்கள், கொடிகளற்ற தோட்டங்கள், பேரீத்த மரங்கள் இன்னும் அதன் கனிகள் மாறுபட்ட விளைச்சலையும், ஒலிவத்தையும், ஒன்றுக்கொன்று ஒப்பான இன்னும் ஒப்பாகாத மாதுளையையும் உற்பத்தி செய்தவன் அவன்தான். அவை காய்த்தால் அதன் கனிகளிலிருந்து புசியுங்கள். அவற்றின் அறுவடை நாளில் அதனுடைய கடமையை (ஸகாத்தை) கொடுங்கள். விரயம் செய்யாதீர்கள். விரயம் செய்பவர்களை நிச்சயமாக அவன் (அல்லாஹ்) நேசிக்க மாட்டான்.
Tamil Translation - Omar Sharifஅவன்தான் கொடிகள் நிறைந்த தோட்டங்கள், கொடிகளற்ற தோட்டங்கள், பேரீச்ச மரங்கள் இன்னும், வித்தியாசமான கனிகளை உடைய விளைச்சலையும், ஆலிவ் பழங்களையும், ஒன்றுக்கொன்று ஒப்பான இன்னும் ஒப்பாகாத மாதுளையையும் உற்பத்தி செய்தான். அவை காய்த்தால் அவற்றின் கனிகளிலிருந்து புசியுங்கள். இன்னும், அவற்றின் அறுவடை நாளில் அவற்றுடைய கடமையை (ஸகாத்தை) கொடுங்கள். இன்னும், விரயம் செய்யாதீர்கள். விரயம் செய்பவர்களை நிச்சயமாக அவன் நேசிக்க மாட்டான்.
Tamil Translation - Abdulhamid Baqawi141. (பந்தலில்) படர்ந்த கொடிகளும், படராத செடிகளும், பேரீத்த மரங்கள் உள்ள சோலைகளையும், புசிக்கக்கூடிய விதவிதமான (பயிர்களையும்) தானியங்களையும், (பார்வைக்கு) ஒன்றுபோலும் வெவ்வேறாகவும் தோன்றக்கூடிய ஒலிவம், மாதுளை (மற்றும் பலவகை கனிவர்க்கங்கள்) ஆகியவற்றையும் அவனே படைத்திருக்கிறான். ஆகவே, அவை காய்த்துப் பழுத்தால் அவற்றை (தாராளமாகப்) புசியுங்கள். அவற்றை அறுவடை செய்யும்போது (இறைவனுக்கு நன்றி செலுத்துவதற்காக) அதில் அவனுடைய பாகத்தையும் (ஜகாத்தை) கொடுத்து விடுங்கள். அளவு கடந்து (வீண்) செலவு செய்யாதீர்கள். ஏனென்றால், அளவு கடந்து (வீண்) செலவு செய்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை.