caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-An'aam அத்தியாயம், வசனம் 142

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 55 · 6:142

وَمِنَ ٱلْأَنْعَٰمِ حَمُولَةً وَفَرْشًا كُلُوا۟ مِمَّا رَزَقَكُمُ ٱللَّهُ وَلَا تَتَّبِعُوا۟ خُطُوَٰتِ ٱلشَّيْطَٰنِ إِنَّهُۥ لَكُمْ عَدُوٌّ مُّبِينٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும் கால்நடைகளில், சுமக்கத் தகுதியானதையும் சுமக்கத் தகுதியற்றதையும் (உற்பத்தி செய்தவன் அவன்தான்). அல்லாஹ் உங்களுக்கு உணவளித்தவற்றில் இருந்து புசியுங்கள். ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள். நிச்சயமாக அவன் உங்களுக்கு வெளிப்படையான எதிரியாவான்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், கால்நடைகளில், சுமக்கத் தகுதியானதையும் சுமக்கத் தகுதியற்றதையும் உற்பத்தி செய்தான். அல்லாஹ் உங்களுக்கு வழங்கிய (அனுமதிக்கப்பட்ட)வற்றில் இருந்து புசியுங்கள். இன்னும், ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள். நிச்சயமாக அவன் உங்களுக்கு வெளிப்படையான எதிரியாவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi142. (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற பெரிய) கால்நடைகளில், சுமை சுமக்கக்கூடிய வற்றையும், (சுமை சுமக்க முடியாத) சிறிய கால்நடைகளையும் (அவனே படைத்திருக்கிறான். ஆகவே,) அல்லாஹ் உங்களுக்கு அளித்திருக்கும் இவற்றில் (புசிக்கக் கூடியவற்றை) நீங்கள் புசியுங்கள். (இதில்) ஷைத்தானுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள். நிச்சயமாக அவன் உங்களுக்குப் பகிரங்கமான எதிரியாவான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70