قَدْ خَسِرَ ٱلَّذِينَ قَتَلُوٓا۟ أَوْلَٰدَهُمْ سَفَهًۢا بِغَيْرِ عِلْمٍ وَحَرَّمُوا۟ مَا رَزَقَهُمُ ٱللَّهُ ٱفْتِرَآءً عَلَى ٱللَّهِ قَدْ ضَلُّوا۟ وَمَا كَانُوا۟ مُهْتَدِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅறிவின்றி மூடத்தனமாக தங்கள் பிள்ளைகளைக் கொன்றவர்களும், அல்லாஹ் (அனுமதி) கொடுத்த (நல்ல)வற்றை (தங்கள் மீது) தடுத்தவர்களும் நஷ்டமடைந்து விட்டனர். (இவ்வாறு) அல்லாஹ்வின் மீது இட்டுக் கட்டுகின்றனர். (அவர்கள்) வழிகெட்டு விட்டனர்; அவர்கள் நேர்வழி பெற்றவர்களாக இருக்கவில்லை.
Tamil Translation - Omar Sharifஅறிவின்றி (அபத்தமாக) முட்டாள்தனமாக தங்கள் பிள்ளைகளைக் கொன்றவர்களும், அல்லாஹ் (அனுமதி) கொடுத்த (நல்ல)வற்றை (தங்கள் மீது) தடுத்தவர்களும் திட்டமாக நஷ்டமடைந்து விட்டனர். (இவ்வாறு) அல்லாஹ்வின் மீது இட்டுக் கட்டுகிறார்கள். (அவர்கள்) திட்டமாக வழிகெட்டு விட்டனர். இன்னும், அவர்கள் நேர்வழி பெற்றவர்களாக இருக்கவில்லை.
Tamil Translation - Abdulhamid Baqawi140. எவர்கள் அறிவின்றி மூடத்தனத்தால் தங்கள் குழந்தைகளைக் கொலை செய்தார்களோ அவர்களும், எவர்கள் அல்லாஹ் (புசிக்கக்) கொடுத்திருந்த (நல்ல)வற்றை (ஆகாதென) அல்லாஹ்வின் மீது பொய் கூறித் தடுத்துக் கொண்டார்களோ அவர்களும் நிச்சயமாக நஷ்டமடைந்து விட்டார்கள். ஆகவே, அவர்கள் நேர்வழி பெற்றவர்களாக இருக்கவில்லை; நிச்சயமாக தீய வழியிலேயே சென்று விட்டனர்.