فَتَرَى ٱلَّذِينَ فِى قُلُوبِهِم مَّرَضٌ يُسَٰرِعُونَ فِيهِمْ يَقُولُونَ نَخْشَىٰٓ أَن تُصِيبَنَا دَآئِرَةٌ فَعَسَى ٱللَّهُ أَن يَأْتِىَ بِٱلْفَتْحِ أَوْ أَمْرٍ مِّنْ عِندِهِۦ فَيُصْبِحُوا۟ عَلَىٰ مَآ أَسَرُّوا۟ فِىٓ أَنفُسِهِمْ نَٰدِمِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) தங்கள் உள்ளங்களில் நோயுள்ளவர்கள் அவர்களில் (நட்புவைக்க) விரைபவர்களாகக் காண்பீர்! "ஆபத்து எங்களை அடைவதை பயப்படுகிறோம்” என்று கூறுகின்றனர். அல்லாஹ் தன்னிடமிருந்து வெற்றி அல்லது வேறு ஒரு காரியத்தைக் கொண்டு வரலாம். (அது சமயம் அவர்கள்) தங்கள் உள்ளங்களில் மறைத்ததின் மீது துக்கப்பட்டவர்களாக ஆகிவிடுவார்கள்.
Tamil Translation - Omar Sharifஆக, (நபியே!) தங்கள் உள்ளங்களில் நோயுள்ளவர்கள் அவர்களுடன் (நட்புவைக்க) விரைபவர்களாக இருப்பதைக் காண்பீர்! “ஆபத்து எங்களை அடைவதை பயப்படுகிறோம்” என்று அவர்கள் கூறுகிறார்கள். ஆக, அல்லாஹ் தன்னிடமிருந்து (நம்பிக்கையாளர்களுக்கு) வெற்றியை அல்லது (யூதர்களின் தாக்குதலை உங்களை விட்டு தடுக்கும்படியான) வேறு ஒரு காரியத்தை கொண்டு வரலாம். (அது சமயம் அவர்கள்) தங்கள் உள்ளங்களில் மறைத்ததின் மீது துக்கப்பட்டவர்களாக ஆகிவிடுவார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi52. (நபியே!) உள்ளங்களில் (நயவஞ்சக) நோய் உள்ளவர்கள் அவர்களிடம் (தோழமை கொள்ளவே) விரைந்து செல்வதை நீர் காண்பீர்! மேலும், ‘‘(நாங்கள் அவர்களை பகைத்துக் கொண்டால்) எங்களுக்கு ஓர் ஆபத்து ஏற்பட்டுவிடுமென்று நாங்கள் பயப்படுகிறோம்'' என்று அவர்கள் கூறுகின்றனர். அல்லாஹ் தன்னிடமிருந்து வெற்றியையோ அல்லது ஒரு (நற்)காரியத்தையோ (அதிசீக்கிரத்தில் உங்களுக்கு) அளிக்கக் கூடும். அது சமயம் அவர்கள் தங்கள் உள்ளங்களுக்குள் மறைத்து வைத்திருந்த (மோசமான என்னத்)தைப் பற்றி கவலை அடைவார்கள்.