وَيَقُولُ ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ أَهَٰٓؤُلَآءِ ٱلَّذِينَ أَقْسَمُوا۟ بِٱللَّهِ جَهْدَ أَيْمَٰنِهِمْ إِنَّهُمْ لَمَعَكُمْ حَبِطَتْ أَعْمَٰلُهُمْ فَأَصْبَحُوا۟ خَٰسِرِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக நாங்களும் உங்களுடன்தான் என்று அல்லாஹ்வின் மீது உறுதியாக சத்தியம் செய்தவர்கள் இவர்கள்தானா? என்று நம்பிக்கையாளர்கள் கூறுவார்கள். அவர்களுடைய (நல்ல) செயல்கள் அழிந்துவிட்டன. ஆகவே (இவர்கள்) நஷ்டவாளிகளாக ஆகிவிட்டனர்.
Tamil Translation - Omar Sharifநிச்சயமாக அவர்கள் உங்களுடன்தான் இருக்கிறார்கள் என்று அல்லாஹ்வின் மீது உறுதியாக சத்தியம் செய்தவர்கள் இவர்கள்தானா? என்று நம்பிக்கையாளர்கள் (நயவஞ்சகர்களைப் பற்றி) கூறுவார்கள். (நயவஞ்சகம் உடைய) அவர்களின் (நல்ல) செயல்கள் அழிந்துவிட்டன. ஆகவே (அவர்கள்) நஷ்டவாளிகளாக ஆகிவிட்டனர்.
Tamil Translation - Abdulhamid Baqawi53. நம்பிக்கையாளர்கள் (மறுமையில்) இவர்களைச் சுட்டிக் காண்பித்து ‘‘நிச்சயமாக நாங்களும் உங்களுடன் இருக்கிறோம் என்று அல்லாஹ்வின் மீது உறுதியான சத்தியம் செய்து கொண்டிருந்தவர்கள் இவர்கள்தானா?'' என்று கூறுவார்கள். இவர்களுடைய நன்மைகள் அனைத்தும் அழிந்து விட்டன. ஆகவே, (இவர்கள்) நஷ்டமடைந்தவர்களாகவே ஆகிவிட்டனர்.