caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Maaida அத்தியாயம், வசனம் 32

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 112 · 5:32

مِنْ أَجْلِ ذَٰلِكَ كَتَبْنَا عَلَىٰ بَنِىٓ إِسْرَٰٓءِيلَ أَنَّهُۥ مَن قَتَلَ نَفْسًۢا بِغَيْرِ نَفْسٍ أَوْ فَسَادٍ فِى ٱلْأَرْضِ فَكَأَنَّمَا قَتَلَ ٱلنَّاسَ جَمِيعًا وَمَنْ أَحْيَاهَا فَكَأَنَّمَآ أَحْيَا ٱلنَّاسَ جَمِيعًا وَلَقَدْ جَآءَتْهُمْ رُسُلُنَا بِٱلْبَيِّنَٰتِ ثُمَّ إِنَّ كَثِيرًا مِّنْهُم بَعْدَ ذَٰلِكَ فِى ٱلْأَرْضِ لَمُسْرِفُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅதன் காரணமாக "எவன் ஓர் உயிரைக் கொலை செய்வதற்கு அல்லாமல் அல்லது பூமியில் விஷமம் செய்ததற்கல்லாமல் (அநியாயமாக) ஓர் உயிரைக் கொன்றானோ அவன் மக்கள் அனைவரையுமே கொன்றவன் போலாவான். எவர் ஓர் உயிரை வாழவைத்தாரோ அவர் மக்கள் அனைவரையும் வாழவைத்தவர் போலாவார்” என்று இஸ்ரவேலர்கள் மீது விதித்தோம். திட்டமாக அவர்களிடம் நம் தூதர்கள் அத்தாட்சிகளுடன் வந்தார்கள். பிறகு, நிச்சயமாக அவர்களில் அதிகமானவர்கள் அதன் பின்னர் பூமியில் வரம்புமீறுகிறார்கள்.
Tamil Translation - Omar Sharifஅதன் காரணமாக, “எவர் பழிக்குப் பழி அல்லாமல் அல்லது பூமியில் விஷமம் (கலகம், குழப்பம், சீர்கேடு) செய்ததற்காக அல்லாமல் (அநியாயமாக) ஓர் உயிரைக் கொன்றாரோ அவர் மக்கள் அனைவரையுமே கொன்றவர் போலாவார். இன்னும், எவர் ஓர் உயிரை வாழவைத்தாரோ அவர் மக்கள் அனைவரையும் வாழவைத்தவர் போலாவார்’’ என்று இஸ்ரவேலர்கள் மீது (சட்டமாக) விதித்தோம். திட்டமாக அவர்களிடம் நம் தூதர்கள் அத்தாட்சிகளுடன் வந்தார்கள். பிறகு, நிச்சயமாக அவர்களில் அதிகமானவர்கள் அதன் பின்னர் பூமியில் எல்லை மீறுகிறார்கள் (-அளவு கடந்து பெரும் பாவங்கள் செய்கிறார்கள்).
Tamil Translation - Abdulhamid Baqawi32. இதன் காரணமாகவே ‘‘எவனொருவன் மற்றோர் ஆத்மாவைக் கொலைக்குப் பதிலாக அல்லது பூமியில் குழப்பத்தைத் தடை செய்வதற்காகவே தவிர (அநியாயமாகக்) கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் அனைவரையுமே கொலை செய்தவன் போலாவான். மேலும், எவன் ஓர் ஆத்மாவை வாழ வைக்கிறானோ அவன் மனிதர்கள் அனைவரையும் வாழவைத்தவன் போலாவான்'' என்று இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு (அளித்த கற்பலகையில்) நாம் வரைந்து விட்டோம். மேலும், அவர்களிடம் நமது பல தூதர்கள் நிச்சயமாகத் தெளிவான அத்தாட்சிகளையும் கொண்டு வந்திருந்தார்கள். இதற்குப் பின்னரும், அவர்களில் பெரும்பாலானவர்கள் பூமியில் வரம்பு கடந்தே வந்தனர்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70