إِنَّمَا جَزَٰٓؤُا۟ ٱلَّذِينَ يُحَارِبُونَ ٱللَّهَ وَرَسُولَهُۥ وَيَسْعَوْنَ فِى ٱلْأَرْضِ فَسَادًا أَن يُقَتَّلُوٓا۟ أَوْ يُصَلَّبُوٓا۟ أَوْ تُقَطَّعَ أَيْدِيهِمْ وَأَرْجُلُهُم مِّنْ خِلَٰفٍ أَوْ يُنفَوْا۟ مِنَ ٱلْأَرْضِ ذَٰلِكَ لَهُمْ خِزْىٌ فِى ٱلدُّنْيَا وَلَهُمْ فِى ٱلْـَٔاخِرَةِ عَذَابٌ عَظِيمٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் போரிடுபவர்கள் இன்னும் பூமியில் குழப்பம் செய்ய முயல்பவர்களுடைய தண்டனையெல்லாம் அவர்கள் கொல்லப்படுவது அல்லது அவர்கள் சிலுவையில் அறையப்படுவது அல்லது அவர்கள் மாறு கை, மாறு கால் வெட்டப்படுவது அல்லது அந்த நாட்டில் இருந்து (வேறு நாட்டுக்கு) அவர்கள் கடத்தப்படுவதுதான். இது அவர்களுக்கு இவ்வுலகத்திலுள்ள இழிவாகும். அவர்களுக்கு மறுமையில் பெரிய வேதனை உண்டு.
Tamil Translation - Omar Sharifஅல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் போரிடுபவர்கள்; இன்னும், பூமியில் குழப்பம்(கலகம், நாசவேலைகள், சீர்கேடுகள்) செய்ய முயல்பவர்களுடைய தண்டனையெல்லாம் அவர்கள் கொல்லப்படுவது; அல்லது, அவர்கள் கழுமரத்தில் அறையப்படுவது; அல்லது அவர்கள் மாறு கை, மாறு கால் வெட்டப்படுவது; அல்லது, அந்த நாட்டில் இருந்து (வேறு நாட்டுக்கு) அவர்கள் கடத்தப்படுவதுதான். இது, அவர்களுக்கு இவ்வுலகத்திலுள்ள இழிவாகும். இன்னும், அவர்களுக்கு மறுமையில் பெரிய தண்டனை உண்டு.
Tamil Translation - Abdulhamid Baqawi33. எவர்கள் அல்லாஹ்வுடனும் அவனுடைய தூதருடனும் போர் தொடுத்தும், பூமியில் விஷமம் செய்து கொண்டும் திரிகிறார்களோ, அவர்களுக்குரிய தண்டனை (அவர்களை) கொன்றுவிடுவது அல்லது சிலுவையில் அறைவது அல்லது மாறு கை(கள், மாறு) கால்களைத் துண்டிப்பது அல்லது (கைது செய்வது அல்லது) நாடு கடத்தி விடுவதுதான். இது இம்மையில் அவர்களுக்கு இழிவு (தரும் தண்டனை) ஆகும். மேலும், மறுமையிலோ மகத்தான வேதனையும் அவர்களுக்குண்டு.