يَٰٓأَهْلَ ٱلْكِتَٰبِ قَدْ جَآءَكُمْ رَسُولُنَا يُبَيِّنُ لَكُمْ عَلَىٰ فَتْرَةٍ مِّنَ ٱلرُّسُلِ أَن تَقُولُوا۟ مَا جَآءَنَا مِنۢ بَشِيرٍ وَلَا نَذِيرٍ فَقَدْ جَآءَكُم بَشِيرٌ وَنَذِيرٌ وَٱللَّهُ عَلَىٰ كُلِّ شَىْءٍ قَدِيرٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionவேதக்காரர்களே! "நற்செய்தி கூறுபவர், எச்சரிப்பவர் எவரும் எங்களுக்கு வரவில்லை” என்று நீங்கள் கூறாதிருக்க தூதர்களின் இடைவெளியில் நம் தூதர் உங்களிடம் வந்துவிட்டார். (அவர் இஸ்லாமை) உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறார். திட்டமாக உங்களிடம் நற்செய்தி கூருபவறும் எச்சரிப்பவரும் வந்துவிட்டார். அல்லாஹ், எல்லாப் பொருள் மீதும் பேராற்றலுடையவன்.
Tamil Translation - Omar Sharifவேதக்காரர்களே! “நற்செய்தி கூறுபவர், எச்சரிப்பவர் எவரும் எங்களுக்கு வரவில்லை’’ என்று நீங்கள் கூறாதிருக்க தூதர்களின் இடைவெளியில் நம் தூதர் உங்களிடம் வந்துவிட்டார். (அவர் இஸ்லாமை) உங்களுக்கு தெளிவுபடுத்துகிறார். இன்னும், அல்லாஹ், ஒவ்வொரு பொருள் மீதும் பேராற்றலுடையவன் ஆவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi19. வேதத்தையுடையவர்களே! (ஈஸாவுக்குப் பின்னர் இதுவரை) தூதர்கள் வராது தடைப்பட்டிருந்த காலத்தில் ‘‘நற்செய்தி கூறுபவர், அச்சமூட்டி எச்சரிப்பவர் எங்களிடம் வரவேயில்லை'' என்று நீங்கள் (குறை) கூறாதிருக்க, (மார்க்கக் கட்டளைகளை) உங்களுக்குத் தெளிவாக அறிவிக்கக்கூடிய நமது (இத்)தூதர் நிச்சயமாக உங்களிடம் வந்துவிட்டார். ஆகவே, அச்சமூட்டி எச்சரிப்பவர், நற்செய்தி கூறுபவர் உங்களிடம் வந்திருக்கிறார். அல்லாஹ், அனைத்தின் மீதும் பேராற்றலுடையவன் ஆவான்.