مَّا كَانَ ٱللَّهُ لِيَذَرَ ٱلْمُؤْمِنِينَ عَلَىٰ مَآ أَنتُمْ عَلَيْهِ حَتَّىٰ يَمِيزَ ٱلْخَبِيثَ مِنَ ٱلطَّيِّبِ وَمَا كَانَ ٱللَّهُ لِيُطْلِعَكُمْ عَلَى ٱلْغَيْبِ وَلَٰكِنَّ ٱللَّهَ يَجْتَبِى مِن رُّسُلِهِۦ مَن يَشَآءُ فَـَٔامِنُوا۟ بِٱللَّهِ وَرُسُلِهِۦ وَإِن تُؤْمِنُوا۟ وَتَتَّقُوا۟ فَلَكُمْ أَجْرٌ عَظِيمٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(நயவஞ்சகர்களே!) இறுதியாக நல்லவர்களிலிருந்து, தீயவர்களை பிரிப்பான். நீங்கள் இருப்பதில் நம்பிக்கையாளர்களை அல்லாஹ் விட்டு விடுபவனாக இல்லை. மறைவானவற்றை அல்லாஹ் உங்களுக்கு அறிவிப்பவனாகவும் இல்லை. எனினும் தன் தூதர்களில் தான் நாடியவரை அல்லாஹ் தேர்ந்தெடுக்கிறான். ஆகவே, அல்லாஹ்வையும் அவனுடைய தூதர்களையும் நம்பிக்கை கொள்ளுங்கள். நீங்கள் நம்பிக்கை கொண்டால், அல்லாஹ்வை அஞ்சினால் உங்களுக்கு மகத்தான கூலி உண்டு.
Tamil Translation - Omar Sharif(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் இருக்கின்ற இதே நிலையில் நம்பிக்கையாளர்(களாகிய உங்)களை அல்லாஹ் விட்டுவிடுபவனாக இல்லை. (சோதனையின்) இறுதியாக நல்லவர்களிலிருந்து, தீயவர்களை பிரிப்பான். இன்னும், மறைவானவற்றை அல்லாஹ் உங்களுக்கு அறிவிப்பவனாகவும் இல்லை. எனினும் தன் தூதர்களில் தான் நாடியவர்களை அல்லாஹ் தேர்ந்தெடு(த்து அவருக்கு அறிவி)ப்பான். ஆகவே, அல்லாஹ்வையும் அவனுடைய தூதர்களையும் நம்பிக்கை கொள்ளுங்கள். இன்னும், நீங்கள் நம்பிக்கை கொண்டால், அல்லாஹ்வை அஞ்சினால் உங்களுக்கு மகத்தான கூலி (அல்லாஹ்விடம்) உண்டு.
Tamil Translation - Abdulhamid Baqawi179. (நயவஞ்சகர்களே!) நீங்கள் இருக்கும் இந்த நிலைமையில் நல்லவர்கள் இன்னாரென்றும் தீயவர்கள் இன்னாரென்றும் பிரித்தறிவிக்கும் வரை (உங்களுடன் கலந்திருக்க) அல்லாஹ் (நம்பிக்கையாளர்களை) விட்டுவைக்க மாட்டான். மறைவானவற்றையும் அல்லாஹ் உங்களுக்கு அறிவிக்கமாட்டான். எனினும் தன் தூதர்களில் தான் விரும்பியவர்களை (இதை அறிவிக்க) அல்லாஹ் தேர்ந்தெடுத்துக் கொள்வான். ஆகவே, அல்லாஹ்வையும் அவனுடைய தூதர்களையும் நம்பிக்கைகொள்ளுங்கள். நீங்கள் (உண்மையாகவே அல்லாஹ்வை) நம்பிக்கை கொண்டு (அவனுக்குப்) பயந்து (நடந்து)கொண்டால் உங்களுக்கு மகத்தான (நற்)கூலி உண்டு.