وَلَا يَحْسَبَنَّ ٱلَّذِينَ يَبْخَلُونَ بِمَآ ءَاتَىٰهُمُ ٱللَّهُ مِن فَضْلِهِۦ هُوَ خَيْرًا لَّهُم بَلْ هُوَ شَرٌّ لَّهُمْ سَيُطَوَّقُونَ مَا بَخِلُوا۟ بِهِۦ يَوْمَ ٱلْقِيَٰمَةِ وَلِلَّهِ مِيرَٰثُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ وَٱللَّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅல்லாஹ் தன் அருளிலிருந்து கொடுத்ததில் கஞ்சத்தனம் செய்பவர்கள் அது தங்களுக்கு நல்லதென்று எண்ண வேண்டாம். மாறாக, அது அவர்களுக்குத் தீமையாகும். அவர்கள் கஞ்சத்தனம் செய்ததை மறுமை நாளில் அரிகண்டமாக (இரும்பு வளையமாக) மாட்டப்படுவார்கள். வானங்கள் இன்னும் பூமியின் வாரிசுரிமை அல்லாஹ்விற்குரியதே. அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை ஆழ்ந்தறிபவன்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், அல்லாஹ் தன் அருளிலிருந்து அவர்களுக்கு கொடுத்ததில் கஞ்சத்தனம் செய்பவர்கள், “அது தங்களுக்கு நல்லது” என்று எண்ண வேண்டாம். மாறாக, அது அவர்களுக்குத் தீமையாகும். அவர்கள் எதில் கஞ்சத்தனம் செய்தார்களோ (அது மறுமையில் விஷப் பாம்பாக மாற்றப்பட்டு அவர்களின் கழுத்துகளில்) அதை சுற்றப்படுவார்கள். இன்னும், வானங்கள் இன்னும் பூமியின் உரிமை அல்லாஹ்விற்கே உரியதாகும். இன்னும், அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை ஆழ்ந்தறிபவன் ஆவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi180. எவர்கள், அல்லாஹ் தன் அருளால் தங்களுக்கு வழங்கிய பொருள்களில் கஞ்சத்தனம் செய்கிறார்களோ அவர்கள் அது தங்களுக்கு நல்லது என்று எண்ணிவிட வேண்டாம். அது அவர்களுக்குத் தீங்காகவே இருக்கும். கஞ்சத்தனத்தால் சேர்த்த பொருள் மறுமையில் அவர்கள் கழுத்தில் அரிகண்டமாக (இரும்பு வளையமாக) மாட்டப்படும். வானங்கள் பூமியின் வாரிசுரிமை அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை எல்லாம் நன்கறிந்தவன் ஆவான்.