وَلَا يَحْسَبَنَّ ٱلَّذِينَ كَفَرُوٓا۟ أَنَّمَا نُمْلِى لَهُمْ خَيْرٌ لِّأَنفُسِهِمْ إِنَّمَا نُمْلِى لَهُمْ لِيَزْدَادُوٓا۟ إِثْمًا وَلَهُمْ عَذَابٌ مُّهِينٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(தண்டிக்காமல்) நிராகரிப்பவர்கள் நாம் அவர்களுக்கு அவகாசம் அளிப்பதெல்லாம் தங்களுக்கு நல்லதென்று நிச்சயம் எண்ண வேண்டாம். நாம் அவர்களுக்கு அவகாசமளிப்பதெல்லாம், அவர்கள் பாவத்தால் அதிகரிப்பதற்காகவே. இழிவூட்டக்கூடிய வேதனையும் அவர்களுக்குண்டு.
Tamil Translation - Omar Sharifநிராகரிப்பவர்கள் - “நாம் அவர்க(ளை உடனே தண்டிக்காமல் அவர்க)ளுக்கு அவகாசம் அளிப்பது அவர்களுக்கு நல்லதென்று” - நிச்சயம் எண்ண வேண்டாம். நாம் அவர்களுக்கு அவகாசமளிப்பதெல்லாம், அவர்கள் பாவத்தால் அதிகரிப்பதற்காகவே. இன்னும், இழிவுபடுத்தும் தண்டனையும் அவர்களுக்குண்டு.
Tamil Translation - Abdulhamid Baqawi178. நிராகரிப்பவர்களை (தண்டிக்காமல்) நாம் தாமதப்படுத்துவது தங்களுக்கு நல்லதென்று நிச்சயமாக அவர்கள் எண்ணிவிட வேண்டாம். (வேதனையை) நாம் அவர்களுக்குத் தாமதப்படுத்துவதெல்லாம் (அவர்களுடைய) பாவம் (மேன்மேலும்,) அதிகரிப்பதற்காகவேதான். மேலும், (முடிவில்) அவர்களுக்கு இழிவு தரும் வேதனை உண்டு.