caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Baqara அத்தியாயம், வசனம் 220

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 87 · 2:220

فِى ٱلدُّنْيَا وَٱلْـَٔاخِرَةِ وَيَسْـَٔلُونَكَ عَنِ ٱلْيَتَٰمَىٰ قُلْ إِصْلَاحٌ لَّهُمْ خَيْرٌ وَإِن تُخَالِطُوهُمْ فَإِخْوَٰنُكُمْ وَٱللَّهُ يَعْلَمُ ٱلْمُفْسِدَ مِنَ ٱلْمُصْلِحِ وَلَوْ شَآءَ ٱللَّهُ لَأَعْنَتَكُمْ إِنَّ ٱللَّهَ عَزِيزٌ حَكِيمٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅநாதைகள் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள். கூறுவீராக: அவர்களைச் சீர்திருத்துவது மிக நன்றே! நீங்கள் அவர்களைச் சேர்த்துக் கொண்டால் (அவர்கள்) உங்கள் சகோதரர்களே! சீர்செய்பவனிலிருந்து சீர்கெடுப்பவனை அல்லாஹ் அறிவான். அல்லாஹ் நாடினால் உங்களைச் சிரமப்படுத்தி இருப்பான். நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன், ஞானவான் ஆவான்.
Tamil Translation - Omar Sharif(நீங்கள்) இம்மை, மறுமையி(ன் காரியத்தி)ல் (சிந்திப்பதற்காக அல்லாஹ் வசனங்களை உங்களுக்கு விவரிக்கிறான்). இன்னும், அனாதைகள் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள். நீர் கூறுவீராக: “அவர்களைச் சரியான முறையில் பராமரிப்பது மிக நன்மையாகும்! இன்னும், நீங்கள் (உங்களுடன்) அவர்களைச் சேர்த்துக் கொண்டால் (அது தவறில்லை. காரணம், அவர்கள்) உங்கள் சகோதரர்களே! சரியான முறையில் பராமரிப்பவரிலிருந்து கெடுதி செய்பவர்களை அல்லாஹ் அறிவான். இன்னும், அல்லாஹ் நாடினால் உங்களைச் சிரமப்படுத்தி இருப்பான். நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன், மகா ஞானவான் ஆவான்.”
Tamil Translation - Abdulhamid Baqawi220. (நபியே!) அநாதைகளை (வளர்ப்பதை)ப் பற்றியும் உம்மிடம் கேட்கிறார்கள். (அதற்கு) நீர் கூறுவீராக: அவர்களைச் சீர்திருத்துவது மிகவும் நன்றே! மேலும், நீங்கள் அவர்களுடன் கலந்(து வசித்)திருக்க நேரிட்டால் (அவர்கள்) உங்கள் சகோதரர்களே! (ஆதலால், அவர்களுடைய சொத்தில் இருந்து அவசியமான அளவு உங்களுக்காகவும் செலவு செய்து கொள்ளலாம்.) ஆனால், ‘‘நன்மை செய்வோம்'' என்று (கூறிக் கொண்டு) தீமை செய்பவர்களை அல்லாஹ் நன்கறிவான். அல்லாஹ் நாடினால் உங்களை (மீள முடியாத) சிரமத்திற்குள்ளாக்கி விடுவான். நிச்சயமாக அல்லாஹ் (எவ்விதமும் செய்ய) வல்லவன், நுண்ணறிவுடையவன் ஆவான். (ஆகவே, அநாதைகள் விஷயத்தில் மோசம் செய்யாது மிக்க அனுதாபத்துடனும் நீதமாகவும் நடந்து கொள்ளுங்கள்.)
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70