caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Baqara அத்தியாயம், வசனம் 221

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 87 · 2:221

وَلَا تَنكِحُوا۟ ٱلْمُشْرِكَٰتِ حَتَّىٰ يُؤْمِنَّ وَلَأَمَةٌ مُّؤْمِنَةٌ خَيْرٌ مِّن مُّشْرِكَةٍ وَلَوْ أَعْجَبَتْكُمْ وَلَا تُنكِحُوا۟ ٱلْمُشْرِكِينَ حَتَّىٰ يُؤْمِنُوا۟ وَلَعَبْدٌ مُّؤْمِنٌ خَيْرٌ مِّن مُّشْرِكٍ وَلَوْ أَعْجَبَكُمْ أُو۟لَٰٓئِكَ يَدْعُونَ إِلَى ٱلنَّارِ وَٱللَّهُ يَدْعُوٓا۟ إِلَى ٱلْجَنَّةِ وَٱلْمَغْفِرَةِ بِإِذْنِهِۦ وَيُبَيِّنُ ءَايَٰتِهِۦ لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَذَكَّرُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇணைவைக்கும் பெண்களை அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை மணக்காதீர்கள். திட்டமாக, நம்பிக்கையாளரான ஓர் அடிமைப் பெண் இணைவைப்பவளை விடச் சிறந்தவள், அவள் உங்களைக் கவர்ந்தாலும் சரியே! இணைவைக்கும் ஆண்களுக்கு அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை நீங்கள் (நம்பிக்கையாளரான பெண்ணை) மணமுடித்துக் கொடுக்காதீர்கள். திட்டமாக நம்பிக்கையாளரான ஓர் அடிமை இணைவைப்பவனைவிடச் சிறந்தவர், அவர் உங்களைக் கவர்ந்தாலும் சரியே. அவர்கள் (இணைவைப்பவர்கள்) நரகத்திற்கு அழைக்கிறார்கள். அல்லாஹ் தன் கட்டளைக் கொண்டு சொர்க்கம் மற்றும் மன்னிப்பிற்கு அழைக்கிறான்; மக்களுக்குத் தன் வசனங்களை அவர்கள் உபதேசம் பெறுவதற்காக விவரிக்கிறான்.
Tamil Translation - Omar Sharifஇணைவைக்கும் பெண்களை - அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை - மணக்காதீர்கள். திட்டமாக, நம்பிக்கையாளரான ஓர் அடிமைப்பெண் இணைவைப்பவளைவிடச் சிறந்தவள், (இணைவைக்கும்) அவள் உங்களைக் கவர்ந்தாலும் சரியே! இணைவைக்கும் ஆண்களுக்கு - அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை - நீங்கள் (நம்பிக்கையாளரான பெண்ணை) மணமுடித்துக் கொடுக்காதீர்கள். திட்டமாக நம்பிக்கையாளரான ஓர் அடிமை இணைவைப்பவனைவிடச் சிறந்தவர், அவன் உங்களைக் கவர்ந்தாலும் சரியே. (இணைவைக்கும்) அவர்கள் (உங்களை) நரகத்திற்கு அழைக்கிறார்கள். அல்லாஹ்வோ, தன் கட்டளையினால் சொர்க்கம் இன்னும் மன்னிப்பிற்கு (உங்களை) அழைக்கிறான். இன்னும், மக்களுக்குத் தன் வசனங்களை அவர்கள் நல்லுபதேசம் பெறுவதற்காக விவரிக்கிறான்.
Tamil Translation - Abdulhamid Baqawi221. (நம்பிக்கையாளர்களே!) இணைவைத்து வணங்கும் பெண்களை அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை நீங்கள் மணந்து கொள்ளாதீர்கள். (ஏனென்றால்,) இணைவைத்து வணங்கும் ஒரு பெண் உங்களைக் கவரக்கூடியவளாக இருப்பினும், நம்பிக்கை கொண்ட ஓர் அடிமைப் பெண் அவளைவிட நிச்சயமாக மேலானவள். (அவ்வாறே) இணை வைத்து வணங்கும் ஆண்கள் நம்பிக்கை கொள்ளும்வரை அவர்களுக்கு (நம்பிக்கையாளர்களான பெண்களை) நீங்கள் மணமுடித்துக் கொடுக்காதீர்கள். இணைவைத்து வணங்கும் ஓர் ஆண் உங்களைக் கவரக்கூடியவனாக இருப்பினும், நம்பிக்கை கொண்ட ஓர் அடிமை அவனைவிட நிச்சயமாக மேலானவன். (இணைவைக்கும்) இவர்கள் எல்லாம் நரகத்திற்கு அழைப்பார்கள். ஆனால், அல்லாஹ்வோ தன் அருளால் சொர்க்கத்திற்கும் (தன்) மன்னிப்புக்கும் (உங்களை) அழைக்கிறான். மனிதர்கள் கவனித்து உபதேசம் பெறுவதற்காக தன் வசனங்களை (மேலும்) விவரிக்கிறான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70