caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Baqara அத்தியாயம், வசனம் 219

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 87 · 2:219

يَسْـَٔلُونَكَ عَنِ ٱلْخَمْرِ وَٱلْمَيْسِرِ قُلْ فِيهِمَآ إِثْمٌ كَبِيرٌ وَمَنَٰفِعُ لِلنَّاسِ وَإِثْمُهُمَآ أَكْبَرُ مِن نَّفْعِهِمَا وَيَسْـَٔلُونَكَ مَاذَا يُنفِقُونَ قُلِ ٱلْعَفْوَ كَذَٰلِكَ يُبَيِّنُ ٱللَّهُ لَكُمُ ٱلْـَٔايَٰتِ لَعَلَّكُمْ تَتَفَكَّرُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionமது இன்னும் சூதாட்டத்தைப் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள். கூறுவீராக: "அவ்விரண்டிலும் பெரும் பாவமும், மக்களுக்கு(ச் சில) பலன்களும் உள்ளன. அவ்விரண்டின் பாவம் அவ்விரண்டின் பலனைவிட மிகப் பெரிது." இன்னும் அவர்கள் எதைத் தர்மம் செய்யவேண்டுமென உம்மிடம் கேட்கிறார்கள். "மீதமுள்ளதை" எனக் கூறுவீராக! நீங்கள் இம்மை, மறுமையி(ன் காரியத்தி)ல் சிந்திப்பதற்காக இவ்வாறே அல்லாஹ் வசனங்களை உங்களுக்கு விவரிக்கிறான்.
Tamil Translation - Omar Sharifமது இன்னும் சூதாட்டத்தைப் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள். (நபியே!) கூறுவீராக: “அவ்விரண்டிலும் பெரும் பாவமும், மக்களுக்கு(ச் சில) பலன்களும் உள்ளன. அவ்விரண்டின் பாவம் அவ்விரண்டின் பலனைவிட மிகப் பெரியதாகும்.’’ இன்னும், அவர்கள் எதைத் தர்மம் செய்யவேண்டுமென உம்மிடம் கேட்கிறார்கள். “(உங்கள் தேவைக்குப் போக) மீதமுள்ளதை (தர்மம் செய்யுங்கள்)’’ எனக் கூறுவீராக! நீங்கள் (இம்மை, மறுமையின் காரியத்தில்) சிந்திப்பதற்காக இவ்வாறு அல்லாஹ் வசனங்களை உங்களுக்கு விவரிக்கிறான்.
Tamil Translation - Abdulhamid Baqawi219. (நபியே!) மதுவைப் பற்றியும் சூதாட்டத்தைப் பற்றியும் உம்மிடம் கேட்கின்றனர். (அதற்கு) நீர் கூறுவீராக! ‘‘அவ்விரண்டிலும் பெரும் பாவங்களும் இருக்கின்றன; மனிதர்களுக்குச் சில பயன்களும் இருக்கின்றன. ஆனால், அவற்றில் உள்ள பாவம் அவற்றிலுள்ள பயனைவிட மிகப் பெரிது. மேலும், (நபியே! தர்மத்திற்காக) எவ்வளவு செலவு செய்வதென உம்மிடம் கேட்கின்றனர். (அதற்கு ‘‘அவசியத்திற்கு வேண்டியது போக) மீதமுள்ளதை(ச் செலவு செய்யுங்கள்)'' எனக் கூறுவீராக. (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் இம்மை, மறுமை(யின் நன்மை)களை கவனத்தில் வைத்துக் கொள்வதற்காக உங்களுக்கு அல்லாஹ் தன் வசனங்களை இவ்வாறு விவரிக்கிறான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70