caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Baqara அத்தியாயம், வசனம் 196

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 87 · 2:196

وَأَتِمُّوا۟ ٱلْحَجَّ وَٱلْعُمْرَةَ لِلَّهِ فَإِنْ أُحْصِرْتُمْ فَمَا ٱسْتَيْسَرَ مِنَ ٱلْهَدْىِ وَلَا تَحْلِقُوا۟ رُءُوسَكُمْ حَتَّىٰ يَبْلُغَ ٱلْهَدْىُ مَحِلَّهُۥ فَمَن كَانَ مِنكُم مَّرِيضًا أَوْ بِهِۦٓ أَذًى مِّن رَّأْسِهِۦ فَفِدْيَةٌ مِّن صِيَامٍ أَوْ صَدَقَةٍ أَوْ نُسُكٍ فَإِذَآ أَمِنتُمْ فَمَن تَمَتَّعَ بِٱلْعُمْرَةِ إِلَى ٱلْحَجِّ فَمَا ٱسْتَيْسَرَ مِنَ ٱلْهَدْىِ فَمَن لَّمْ يَجِدْ فَصِيَامُ ثَلَٰثَةِ أَيَّامٍ فِى ٱلْحَجِّ وَسَبْعَةٍ إِذَا رَجَعْتُمْ تِلْكَ عَشَرَةٌ كَامِلَةٌ ذَٰلِكَ لِمَن لَّمْ يَكُنْ أَهْلُهُۥ حَاضِرِى ٱلْمَسْجِدِ ٱلْحَرَامِ وَٱتَّقُوا۟ ٱللَّهَ وَٱعْلَمُوٓا۟ أَنَّ ٱللَّهَ شَدِيدُ ٱلْعِقَابِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநீங்கள் ஹஜ்ஜையும் உம்றாவையும் அல்லாஹ்வுக்காக முழுமையாக்குங்கள். நீங்கள் தடுக்கப்பட்டால் பலியில் சாத்தியமானது (பரிகாரமாகும்). பலி தன் இடத்தை அடையும் வரை உங்கள் தலைகளை சிரைக்காதீர்கள். உங்களில் எவர், நோயாளியாக இருக்கிறாரோ அல்லது அவருடைய தலையில் அவருக்கு இடையூறு இருக்குமோ ஆகவே, (அவர்) நோன்பு அல்லது தர்மம் அல்லது பலிகளிலிருந்து பரிகாரம் (செய்யவும்). நீங்கள் பாதுகாப்புப் பெற்றால் எவர் உம்றாவைக் கொண்டு ஹஜ்ஜு வரை சுகம் அனுபவிப்பாரோ (அவர்) பலியில் சாத்தியமானது (கொடுக்கவும்). எவர் (பலியை) பெறவில்லையோ, அவர் ஹஜ்ஜில் மூன்று நாட்கள் நோன்பும் நீங்கள் திரும்பியபின் ஏழும் (வைக்க வேண்டும்). அவை முழுமையான பத்தாகும். இது எவருடைய குடும்பம் அல் மஸ்ஜிதுல் ஹராமில் வசிப்பவர்களாக இருக்கவில்லையோ அவருக்குத்தான். நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் தண்டிப்பதில் மிகக் கடுமையானவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், நீங்கள் ஹஜ்ஜையும் உம்ராவையும் அல்லாஹ்வுக்காக முழுமையாக்குங்கள். நீங்கள் (மக்காவிற்கு யாத்திரை செல்லும்போது வழியில்) தடுக்கப்பட்டால் (உங்களுக்கு) இலகுவாகக் கிடைக்கின்ற ஒரு பிராணியை பலி கொடுங்கள். அந்த பலிப் பிராணி தன் இடத்தை அடையும் வரை உங்கள் தலை(முடி)களை சிரைக்காதீர்கள். ஆக, உங்களில் எவர் நோயாளியாக இருக்கிறாரோ அல்லது அவருடைய தலையில் அவருக்கு (பேன் அல்லது காயம் போன்ற சிரமம் தரும்) இடையூறு இருந்து, அதனால் அவர் தனது தலையை சிரைத்துவிடுவாரோ அவர் நோன்பு வைத்து; அல்லது, தர்மம் கொடுத்து; அல்லது, பலிப் பிராணியை அறுத்து பரிகாரம் செய்யவும். நீங்கள் பாதுகாப்புப் பெற்றால் எவர் உம்ரா செய்துவிட்டு (இஹ்ராமிலிருந்து வெளியேறி) ஹஜ்ஜு(க்கும் இஹ்ராம் கட்டுகின்ற) வரை சுகம் அனுபவிப்பாரோ (அவர் தனக்கு) இலகுவான பலிப் பிராணியை அறுக்கவும். எவர் (பலிப் பிராணியை) பெறவில்லையோ, அவர் ஹஜ்ஜில் மூன்று நாட்களும் நீங்கள் (ஹஜ் முடித்து) திரும்பிய பின் ஏழு நாட்களும் நோன்பு வைக்க வேண்டும். அவை முழுமையான பத்து நாட்களாகும். (ஹஜ் தமத்துஃ செய்கின்ற அனுமதியாகிய) அது எவருடைய குடும்பம் அல் மஸ்ஜிதுல் ஹராமில் (-மக்காவில்) வசிப்பவர்களாக இருக்கவில்லையோ அவருக்குத்தான். இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் தண்டிப்பதில் மிகக் கடுமையானவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi196. அல்லாஹ்வுக்காக (ஆரம்பம் செய்த) ஹஜ்ஜையும் உம்ராவையும் நீங்கள் முழுமையாக்குங்கள். ஆனால், (மக்கா செல்ல முடியாதவாறு) நீங்கள் தடுக்கப்பட்டு (ஹஜ்ஜை முழுமையாக்க முடியா)விட்டால் ‘ஹத்யு' (என்னும் ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவை)களில் (உங்களுக்குச்) சாத்தியமானவை பரிகாரமாகும். தவிர, அந்த ஹத்யுக்கள் தாம் செல்ல வேண்டிய (மக்காவிலுள்ள ஹரம் என்னும்) இடத்தை அடையும்வரை நீங்கள் உங்கள் தலைமுடியைச் சிரைத்துக் கொள்ளாதீர்கள். ஆயினும், (இஹ்ராம் கட்டிய) உங்களில் எவரேனும் நோயாளியாகவோ அல்லது தலையில் (பேன், புண், வலி ஆகியவற்றால்) இடையூறு உள்ளவராகவோ இருந்து (முடியிறக்கிக் கொண்டு) விட்டால், அதற்குப் பரிகாரமாக (அவர் மூன்று) நோன்புகள் நோற்கவும். அல்லது, (ஆறு ஏழைகளுக்கு உணவு) தானம் செய்யவும். அல்லது, (ஓர் ஆடு) குர்பானி கொடுக்கவும். மேலும், (இஹ்ராம் அணிந்த) நீங்கள் எவ்விதத் தடையுமில்லாது (ஹஜ்ஜூ செய்ய) வசதி பெற்றவர்களாக இருந்து (மக்கா சென்ற பின் உங்களில்) எவரேனும் உம்ராவை (மட்டும்) செய்துவிட்டு ஹஜ்ஜூக்கு முன்னதாகவே (ஹஜ்ஜூடைய காலத்தில் தடுக்கப்பட்டிருந்த) சுகத்தை அனுபவித்து விட்டால் (அதற்குப்) பரிகாரமாக ஹத்யுக்களில்* இயன்றதைக் கொடுக்கவும். ஆனால், (ஹத்யுக்களில் எதையுமே) பெற்றுக் கொள்ளாதவர், ஹஜ்ஜூடைய காலத்தில் மூன்றும் (தன் இருப்பிடம்) திரும்பியபின் ஏழும், ஆக முழுமையாகப் பத்து நாட்கள் நோன்பு நோற்கவும். (தடுக்கப்பட்ட சுகத்தை அனுபவிக்கும்) இ(வ்வுரிமையான)து எவருடைய குடும்பம் மஸ்ஜிதுல் ஹராமில் (மக்காவில்) குடியிருக்கவில்லையோ அவருக்குத்தான். ஆகவே, நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் (குற்றவாளிகளை) வேதனை செய்வதில் மிகக் கடுமையானவன் என்பதையும் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70