caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Baqara அத்தியாயம், வசனம் 165

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 87 · 2:165

وَمِنَ ٱلنَّاسِ مَن يَتَّخِذُ مِن دُونِ ٱللَّهِ أَندَادًا يُحِبُّونَهُمْ كَحُبِّ ٱللَّهِ وَٱلَّذِينَ ءَامَنُوٓا۟ أَشَدُّ حُبًّا لِّلَّهِ وَلَوْ يَرَى ٱلَّذِينَ ظَلَمُوٓا۟ إِذْ يَرَوْنَ ٱلْعَذَابَ أَنَّ ٱلْقُوَّةَ لِلَّهِ جَمِيعًا وَأَنَّ ٱللَّهَ شَدِيدُ ٱلْعَذَابِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅல்லாஹ்வை அன்றி (பல) இணைகளை எடுத்துக் கொண்டு, அல்லாஹ்வை நேசிப்பதுபோல, அவற்றை நேசிப்பவர்களும் மக்களில் இருக்கிறார்கள். நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வை நேசிப்பதில் மிகக் கடுமையானவர்கள். அநியாயக்காரர்கள் பார்த்தால் அவர்கள் வேதனையைக் காணும்போது அனைத்து பலமும் நிச்சயமாக அல்லாஹ்வுக்கே உரியது, வேதனை செய்வதில் அல்லாஹ் கடினமானவன் (என அறிவார்கள்).
Tamil Translation - Omar Sharifமக்களில் அல்லாஹ்வை அன்றி (அவனுக்கு) சமமானவர்களை (-கற்பனை தெய்வங்களை) ஏற்படுத்தியவர்களும் இருக்கிறார்கள். அல்லாஹ்வின் மீது அன்பு வைக்கப்படுவது போல் அவர்கள் அவற்றின் மீது அன்பு வைக்கிறார்கள். நம்பிக்கையாளர்கள் (உண்மையான இறைவனாகிய) அல்லாஹ்வின் மீதுதான் அதிகம் அன்பு வைப்பார்கள். அநியாயக்காரர்கள் (நரக) தண்டனையை (நேருக்கு நேர் கண்ணால்) காணும்போது, (தங்களது இறுதி முடிவு என்ன என்பதை) பார்த்துவிட்டால், “அனைத்து ஆற்றலும் நிச்சயமாக அல்லாஹ்வுக்கே உரியது; (தாம் வணங்கிய தெய்வங்கள் சக்தி அற்றவை;) தண்டிப்பதில் அல்லாஹ் கடினமானவன்; (நம்மை அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து நமது தெய்வங்களால் காப்பாற்ற முடியாது)” என்பதை அவர்கள் புரிந்து கொள்வார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi165. மேலும், அல்லாஹ் அல்லாதவற்றை அவனுக்கு இணைகளாக எடுத்துக் கொண்டு, அல்லாஹ்வை நேசிப்பது போல அவற்றை நேசிப்பவர்களும் மனிதர்களில் பலர் இருக்கின்றனர். எனினும், இறை நம்பிக்கையாளர்கள் (இவர்களைவிட) அதிகமாக அல்லாஹ்வை நேசிப்பார்கள். (தவிர) இந்த அநியாயக்காரர்கள் (சிறிது) சிந்திக்க வேண்டாமா? இவர்கள் வேதனையைத் (தங்கள் கண்ணால்) காணும்போது வேதனை செய்வதில் அல்லாஹ் மிகவும் கடுமையானவனாக இருப்பதுடன், எல்லா வல்லமையும் நிச்சயமாக அல்லாஹ்வுக்கே இருக்கின்றன. (தாங்கள் நேசித்தவற்றுக்கு இல்லை என்று அறிந்து கொள்வார்கள்).
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70