caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Baqara அத்தியாயம், வசனம் 166

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 87 · 2:166

إِذْ تَبَرَّأَ ٱلَّذِينَ ٱتُّبِعُوا۟ مِنَ ٱلَّذِينَ ٱتَّبَعُوا۟ وَرَأَوُا۟ ٱلْعَذَابَ وَتَقَطَّعَتْ بِهِمُ ٱلْأَسْبَابُ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionபின்பற்றப்பட்ட (தலை)வர்கள் பின்பற்றியவர்களை விட்டு (மறுமையில்) விலகி, அவர்கள் (அனைவரும்) வேதனையைக் கண்டு, அவர்களுக்கிடையில் (இருந்த) தொடர்புகள் அறுந்துவிடும்போது (பின்பற்றியவர்கள் தங்கள் செயலை நினைத்து துக்கப்படுவார்கள்).
Tamil Translation - Omar Sharif(மதத் தலைவர்களும் அவர்களை பின்பற்றுபவர்களும் மறுமையில் நரக) தண்டனையைக் கண்கூடாக பார்த்த சமயத்தில் பின்பற்றப்பட்ட (மதத் தலை)வர்களோ (தங்களை) பின்பற்றியவர்களை விட்டு விலகிவிடும்போது; (அவர்கள் எல்லோரும் தங்கள் வெற்றிக்காக நம்பியிருந்த) காரணிகள் (-சிலைகளும் அவற்றுக்கு செய்த வழிபாடுகளும்) அவர்களை விட்டு துண்டித்து (பயனற்று போய்)விடும்போது (“அனைத்து ஆற்றலும் நிச்சயமாக அல்லாஹ்வுக்கே உரியது; தாம் வணங்கிய தெய்வங்களுக்கு அறவே சக்தி இல்லை; தண்டிப்பதில் அல்லாஹ் கடினமானவன்; அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து நமது தெய்வங்களால் நம்மை காப்பாற்ற முடியாது” என்பதை அவர்கள் எல்லோரும் திட்டமாக புரிந்து கொள்வார்கள்).
Tamil Translation - Abdulhamid Baqawi166. (இவர்களுக்குத் தவறான) இவ்வழியைக் காட்டியவர்களும் (மறுமையில்) வேதனையைக் (கண்ணால்) கண்டவுடன் (தங்களைப்) பின்பற்றிய இவர்களை (முற்றிலும் கைவிட்டு) விட்டு விலகிக் கொள்வார்கள். அவர்களுக்கு(ம், அவர்களைப் பின்பற்றிய இவர்களுக்கு)மிடையில் இருந்த தொடர்புகள் அனைத்தும் அறுபட்டுவிடும்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70