قَدْ نَرَىٰ تَقَلُّبَ وَجْهِكَ فِى ٱلسَّمَآءِ فَلَنُوَلِّيَنَّكَ قِبْلَةً تَرْضَىٰهَا فَوَلِّ وَجْهَكَ شَطْرَ ٱلْمَسْجِدِ ٱلْحَرَامِ وَحَيْثُ مَا كُنتُمْ فَوَلُّوا۟ وُجُوهَكُمْ شَطْرَهُۥ وَإِنَّ ٱلَّذِينَ أُوتُوا۟ ٱلْكِتَٰبَ لَيَعْلَمُونَ أَنَّهُ ٱلْحَقُّ مِن رَّبِّهِمْ وَمَا ٱللَّهُ بِغَٰفِلٍ عَمَّا يَعْمَلُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) உம் முகம் வானத்தின் பக்கம் திரும்புவதை திட்டமாக காண்கிறோம். ஆகவே, நீர் விரும்புகிற ஒரு கிப்லாவிற்கு உம்மை நிச்சயமாகத் திருப்புவோம். எனவே, நீர் ‘அல் மஸ்ஜிதுல் ஹராம்' பக்கம் உம் முகத்தைத் திருப்புவீராக. (முஸ்லிம்களே!) நீங்கள் எங்கிருந்தாலும் அதன் பக்கம் உங்கள் முகங்களைத் திருப்புங்கள். நிச்சயமாக வேதம் கொடுக்கப் பட்டவர்கள் "நிச்சயமாக இது தங்கள் இறைவனிடமிருந்து (வந்துள்ள) உண்மைதான்'' என திட்டமாக அறிவார்கள். அவர்கள் செய்வதைப் பற்றி அல்லாஹ் கவனமற்றவனாக இல்லை.
Tamil Translation - Omar Sharif(நபியே!) உம் முகம் வானத்தின் பக்கம் பல முறை திரும்புவதை திட்டமாக நாம் காண்கிறோம். ஆகவே, நீர் பிரியப்படுகின்ற ஒரு கிப்லாவிற்கு உம்மை நிச்சயமாக நாம் திருப்புவோம். எனவே, நீர் (தொழுகைக்கு நின்றால்) ‘அல் மஸ்ஜிதுல் ஹராம்’ பக்கம் உம் முகத்தைத் திருப்புவீராக. இன்னும் (முஸ்லிம்களே!) நீங்கள் எங்கிருந்தாலும் (தொழும்போது) அதன் பக்கம் உங்கள் முகங்களைத் திருப்புங்கள். நிச்சயமாக வேதம் கொடுக்கப்பட்டவர்கள், - “நிச்சயமாக இது தங்கள் இறைவனிடமிருந்து (வந்துள்ள) உண்மைதான்’’ என - திட்டமாக அறிவார்கள். இன்னும் அவர்கள் செய்வதைப் பற்றி அல்லாஹ் கவனமற்றவனாக இல்லை.
Tamil Translation - Abdulhamid Baqawi144. (நபியே!) உமது முகம் (பிரார்த்தனை செய்து) அடிக்கடி வானத்தை நோக்குவதை நாம் காண்கிறோம். ஆதலால், நீர் விரும்பும் கிப்லா(வாகிய மக்கா)வின் பக்கமே நாம் உம்மை நிச்சயமாகத் திருப்புகிறோம். எனவே, நீர் (தொழும்போது மக்காவிலுள்ள) ‘மஸ்ஜிதுல் ஹராமின்' பக்கமே உமது முகத்தைத் திருப்புவீராக. (நம்பிக்கையாளர்களே!) நீங்களும் எங்கிருந்த போதிலும் (தொழுகையில்) அதன் பக்கமே உங்கள் முகங்களைத் திருப்புங்கள். வேதம் கொடுக்கப்பட்ட (யூதர்களும், கிறிஸ்தவர்களும் (நீங்கள் மக்காவின் திசையளவில் திரும்பிய) ‘‘இது தங்கள் இறைவனிடமிருந்(து வந்)த உண்மை(யான உத்தரவு)தான்'' என நிச்சயமாக அறிவார்கள். (ஏனென்றால், அவ்வான்ற அவர்களுடைய வேதத்தில் இருக்கிறது. எனவே, உண்மையை மறைக்கும்) அவர்கள் செயலைப்பற்றி அல்லாஹ் பராமுகமாயில்லை.