caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Baqara அத்தியாயம், வசனம் 126

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 87 · 2:126

وَإِذْ قَالَ إِبْرَٰهِـۧمُ رَبِّ ٱجْعَلْ هَٰذَا بَلَدًا ءَامِنًا وَٱرْزُقْ أَهْلَهُۥ مِنَ ٱلثَّمَرَٰتِ مَنْ ءَامَنَ مِنْهُم بِٱللَّهِ وَٱلْيَوْمِ ٱلْـَٔاخِرِ قَالَ وَمَن كَفَرَ فَأُمَتِّعُهُۥ قَلِيلًا ثُمَّ أَضْطَرُّهُۥٓ إِلَىٰ عَذَابِ ٱلنَّارِ وَبِئْسَ ٱلْمَصِيرُ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇப்ராஹீம், "என் இறைவா! (மக்காவாகிய) இதைப் பாதுகாப்பளிக்கக் கூடிய ஒரு பட்டணமாக ஆக்கு! அதனுடையவர்களில் எவர் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டாரோ அவருக்குக் கனிகளிலிருந்து உணவளி!" எனக் கூறிய சமயத்தை நினைவு கூருங்கள். (அல்லாஹ்) கூறினான்: "எவர் நிராகரிப்பாரோ அவரைக் கொஞ்சம் சுகமனுபவிக்க (விட்டு) வைப்பேன். பிறகு நரக வேதனையின் பக்கம் (செல்லும்படி) அவரை நிர்ப்பந்திப்பேன். செல்லுமிடத்தால் அது மிகக் கெட்டது."
Tamil Translation - Omar Sharifஇன்னும், இப்ராஹீம் கூறிய சமயத்தை நினைவு கூர்வாயாக: “என் இறைவா! (மக்காவாகிய) இதைப் பாதுகாப்பளிக்கக்கூடிய ஒரு நகரமாக ஆக்கு! இன்னும் அங்கு வசிப்பவர்களில் எவர் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டாரோ அவருக்குக் கனி(வகை)களிலிருந்து உணவளி!” (அதற்கு அல்லாஹ்) கூறினான்: “எவர் நிராகரிப்பாரோ அவரை சிறிது (காலம்) சுகமனுபவிக்க வைப்பேன். பிறகு, நரக தண்டனையின் பக்கம் (செல்லும்படி) அவரை நிர்ப்பந்திப்பேன். இன்னும் அது மிகக் கெட்ட மீளுமிடமாகும்.”
Tamil Translation - Abdulhamid Baqawi126. இப்றாஹீம் (இறைவனிடம்) ‘‘என் இறைவனே! (மக்காவாகிய) இதை பாதுகாப்பு அளிக்கும் ஒரு பட்டணமாக ஆக்கி, இதில் வசிப்பவர்களில் எவர் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கைக் கொள்கிறாரோ அவருக்கு உணவாகப் பலவகைக் கனிவர்க்கங்களையும் அளித்துவா!'' எனக் கூறியதற்கு (இறைவன் ‘‘என்னை நம்பிக்கை கொள்பவருக்கு நான் உணவளிப்பதுபோல என்னை) நிராகரிப்ப(வனுக்கும் உணவளித்து அ)வனையும் சிறிது காலம் (அங்கு) சுகமனுபவிக்க விட்டுவைப்பேன். பின்னர் நரக வேதனையின் பக்கம் (செல்லும்படி) அவனை நிர்ப்பந்திப்பேன். அவன் செல்லும் (அந்த) இடம் (மிகக்) கெட்டது'' என்று கூறினான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70