caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Baqara அத்தியாயம், வசனம் 127

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 87 · 2:127

وَإِذْ يَرْفَعُ إِبْرَٰهِـۧمُ ٱلْقَوَاعِدَ مِنَ ٱلْبَيْتِ وَإِسْمَٰعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّآ إِنَّكَ أَنتَ ٱلسَّمِيعُ ٱلْعَلِيمُ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇப்ராஹீமும் இஸ்மாயீலும் (அவ்வீட்டின்) அஸ்திவாரங்களை உயர்த்திய சமயத்தை நினைவு கூருங்கள். "எங்கள் இறைவா! எங்களிடமிருந்து ஏற்றுக்கொள். நிச்சயமாக நீதான் நன்கு செவியுறுபவன்; மிக அறிந்தவன்."
Tamil Translation - Omar Sharifஇன்னும், இப்ராஹீமும் இஸ்மாயீலும் இறை இல்லத்தின் அஸ்திவாரங்களை உயர்த்திய சமயத்தை நினைவு கூர்வாயாக! (அவ்விருவரும் பிரார்த்தனை செய்தார்கள்:) “எங்கள் இறைவா! எங்களிடமிருந்து ஏற்றுக்கொள். நிச்சயமாக நீதான் நன்கு செவியுறுபவன்; மிக அறிந்தவன்.”
Tamil Translation - Abdulhamid Baqawi127. இப்றாஹீமும், இஸ்மாயீலும் அவ்வீட்டின் அஸ்திவாரத்தை உயர்த்தியபொழுது ‘‘எங்கள் இறைவனே! (உனக்காக நாங்கள் செய்த இப்பணியை) எங்களிடமிருந்து ஏற்றுக்கொள்வாயாக! நிச்சயமாக நீதான் (எங்கள் பிரார்த்தனையை) நன்கு செவியுறுபவன், நன்கு அறிந்தவன்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70