سَيَقُولُونَ ثَلَٰثَةٌ رَّابِعُهُمْ كَلْبُهُمْ وَيَقُولُونَ خَمْسَةٌ سَادِسُهُمْ كَلْبُهُمْ رَجْمًۢا بِٱلْغَيْبِ وَيَقُولُونَ سَبْعَةٌ وَثَامِنُهُمْ كَلْبُهُمْ قُل رَّبِّىٓ أَعْلَمُ بِعِدَّتِهِم مَّا يَعْلَمُهُمْ إِلَّا قَلِيلٌ فَلَا تُمَارِ فِيهِمْ إِلَّا مِرَآءً ظَٰهِرًا وَلَا تَسْتَفْتِ فِيهِم مِّنْهُمْ أَحَدًا
Tamil Translation - Omar Sharif - Abridged Version“(அக்குகைவாசிகள்) மூவர் (இருந்தனர்) அவர்களில் நான்காவதாக அவர்களின் நாய் இருந்தது” என்று (சிலர்) கூறுகின்றனர். இன்னும் (சிலர்) கூறுவர்: “(அவர்கள்) ஐவர் (இருந்தனர்), அவர்களில் ஆறாவதாக அவர்களின் நாய் இருந்தது” (இவ்வாறு மறைவான அறிவைப்பற்றி) கண்மூடித்தனமாக (உளறுகின்றனர்). (சிலர்) கூறுவர், “(அவர்கள்) ஏழு நபர்கள். இன்னும் அவர்களில் எட்டாவதாக அவர்களின் நாய் இருந்தது.” கூறுவீராக! “என் இறைவன் அவர்களின் எண்ணிக்கையை மிக அறிந்தவன். குறைவானவர்களைத் தவிர (எல்லோரும்) அவர்களை அறிய மாட்டார்கள்.” ஆகவே, அவர்களைப் பற்றி வெளிப்படையான விவாதமாகவே தவிர (இவர்களிடம்) விவாதிக்காதீர். இன்னும் இவர்களில் ஒருவரிடமும் அவர்களைப் பற்றி விளக்கம் கேட்காதீர்.
Tamil Translation - Omar Sharif“(அக்குகைவாசிகள்) மூவர் (இருந்தனர்), அவர்களில் நான்காவதாக அவர்களின் நாய் இருந்தது” என்று (பிற்காலத்தில் சிலர்) கூறுகிறார்கள். இன்னும், (சிலர்) கூறுகிறார்கள்: “(அவர்கள்) ஐவர் (இருந்தனர்), அவர்களில் ஆறாவதாக அவர்களின் நாய் இருந்தது” என்று” (இந்த இரு வகையான கூற்றுகளும்) மறைவான அறிவைப்பற்றி கண்மூடித்தனமாக பேச்சாகும். (சிலர்) கூறுகிறார்கள்: “(அவர்கள்) ஏழு நபர்கள். இன்னும் அவர்களில் எட்டாவதாக அவர்களின் நாய் இருந்தது. (நபியே!) கூறுவீராக! “என் இறைவன் அவர்களின் எண்ணிக்கையை மிக அறிந்தவன். குறைவானவர்களைத் தவிர அவர்களைப் பற்றி அறிய மாட்டார்கள்.” ஆகவே, அவர்களைப் பற்றி வெளிப்படையான விவாதமாகவே தவிர (இவர்களிடம்) விவாதிக்காதீர். இன்னும், இவர்களில் ஒருவரிடமும் அவர்களைப் பற்றி விளக்கம் (எதுவும்) கேட்காதீர்.
Tamil Translation - Abdulhamid Baqawi22. (குகையிலிருந்த அவர்கள்) மூன்று பேர்தான்; நான்காவது அவர்களுடைய நாய் என்று (சிலரு)ம்; (அவர்கள்) ஐந்து பேர், அவர்களுடைய நாய் ஆறாவதாகும் என்று (வேறு சிலரு)ம்; மறைவான விஷயங்களைத் தாங்கள் கண்டுபிடித்து விட்டவர்களைப் போல் (மிக்க உறுதியாகக்) கூறுகின்றனர். மற்றும் சிலரோ அவர்கள் ஏழு பேர், எட்டாவது அவர்களுடைய நாய் என்றும் கூறுகின்றனர். எனினும் (நபியே!) ‘‘அவர்களுடைய எண்ணிக்கையை சிலரைத் தவிர மற்றவர்கள் அறிய மாட்டார்கள். அவர்களுடைய எண்ணிக்கையை என் இறைவன்தான் நன்கறிவான்'' என்று கூறுவீராக. இன்னும், அவர்களைப் பற்றி மேலெழுந்த வாரியாகவே தவிர தர்க்கிக்காதீர். அவர்களைப் பற்றி இவர்களில் ஒருவனிடமும் (ஒன்றுமே) கேட்காதீர்.''