caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Kahf அத்தியாயம், வசனம் 21

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 69 · 18:21

وَكَذَٰلِكَ أَعْثَرْنَا عَلَيْهِمْ لِيَعْلَمُوٓا۟ أَنَّ وَعْدَ ٱللَّهِ حَقٌّ وَأَنَّ ٱلسَّاعَةَ لَا رَيْبَ فِيهَآ إِذْ يَتَنَٰزَعُونَ بَيْنَهُمْ أَمْرَهُمْ فَقَالُوا۟ ٱبْنُوا۟ عَلَيْهِم بُنْيَٰنًا رَّبُّهُمْ أَعْلَمُ بِهِمْ قَالَ ٱلَّذِينَ غَلَبُوا۟ عَلَىٰٓ أَمْرِهِمْ لَنَتَّخِذَنَّ عَلَيْهِم مَّسْجِدًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் தங்கள் (மறுமைப் பற்றிய) விஷயத்தில் தங்களுக்கிடையில் தர்க்கித்த போது, நிச்சயம் அல்லாஹ்வின் வாக்கு உண்மை, நிச்சயம் மறுமை அ(து நிகழ்வ)தில் அறவே சந்தேகம் இல்லை என்று அவர்கள் அறிவதற்காக (அக்குகைவாசிகளை எழுப்பிய) அவ்வாறே, அவர்களை (அம்மக்களுக்கு) காண்பித்தோம். (அம்மக்கள்), அவர்களுக்கருகில் ஒரு கட்டடத்தை எழுப்புங்கள் என்று கூறினர். அவர்களின் இறைவன் அவர்களை மிக அறிந்தவன். அந்த வாலிபர்களின் விஷயத்தில் மிகைத்தவர்கள் கூறினர், “நிச்சயம் அவர்களுக்கருகில் ஒரு தொழுமிடத்தை (மஸ்ஜிதை) ஆக்குவோம்.”
Tamil Translation - Omar Sharifஅவர்கள் தங்களது (மறுமை) விஷயத்தில் தங்களுக்கிடையில் தர்க்கித்த போது, நிச்சயம் அல்லாஹ்வின் வாக்கு உண்மையாகும்; இன்னும், நிச்சயம் மறுமை - அ(து நிகழ்வ)தில் அறவே சந்தேகம் இல்லை என்று அவர்கள் அறிவதற்காக (அக்குகைவாசிகளை எழுப்பிய) அவ்வாறே, அவர்களை (அந்த ஊர் மக்களுக்கு) காண்பித்து கொடுத்தோம். ஆக, அவர்களுக்கருகில் ஒரு கட்டடத்தை எழுப்புங்கள், அவர்களின் இறைவன் அவர்களை மிக அறிந்தவன் என்று (அந்த ஊர் மக்கள்) கூறினார்கள். அவர்களின் விஷயத்தில் மிகைத்தவர்கள் கூறினார்கள்: “நிச்சயம் அவர்களுக்கருகில் ஒரு தொழுமிடத்தை (மஸ்ஜிதை) நாம் ஏற்படுத்துவோம்.”
Tamil Translation - Abdulhamid Baqawi21. (மரணித்தவர்களை அல்லாஹ் உயிர்ப்பிப்பான் என்ற) அல்லாஹ்வுடைய வாக்குறுதி உண்மையானது என்றும், மறுமை வருவதில் ஒரு சந்தேகமுமில்லை என்றும், (இதன் மூலம் அப்பட்டிணவாசிகளான) அவர்கள் உறுதியாக அறிந்து கொள்ளும் பொருட்டு இவ்வாறு (உணவு தேடி அங்கு செல்லும்படி செய்து) அவர்களுக்கு (இவர்களைக்) காட்டிக் கொடுத்தோம். (அந்நகரவாசிகள் இவர்கள் இருந்த குகைக்கு வந்து) ‘‘இவர்கள் யார் என்பதைப் பற்றித் (தங்களுக்குள்) தர்க்கித்துக் கொண்டு, இவர்களை இவர்களுடைய இறைவன்தான் நன்கறிவான் என்றும், இவர்கள் இருக்கும் இடத்தில் (உயர்ந்த) ஒரு கோபுரத்தை (ஞாபகார்த்தமாக) எழுப்புங்கள்'' என்றும் கூறினார்கள். (இந்தத் தர்க்கத்தில்) எவர்களுடைய அபிப்பிராயம் மேலோங்கியதோ அவர்கள் ‘‘இவர்கள் இருக்கும் இடத்தில் ஒரு மஸ்ஜிதை நிச்சயமாக நாம் அமைத்து விடுவோம்'' என்றார்கள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70