caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Kahf அத்தியாயம், வசனம் 20

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 69 · 18:20

إِنَّهُمْ إِن يَظْهَرُوا۟ عَلَيْكُمْ يَرْجُمُوكُمْ أَوْ يُعِيدُوكُمْ فِى مِلَّتِهِمْ وَلَن تُفْلِحُوٓا۟ إِذًا أَبَدًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக அவர்கள் உங்களை அறிந்தால் உங்களை ஏசுவார்கள். (அல்லது கொல்வார்கள்.) அல்லது உங்களை தங்கள் மார்க்கத்திற்கு திருப்பி விடுவார்கள். அவ்வாறு நடந்துவிட்டால் எப்போதும் வெற்றி பெறவே மாட்டீர்கள்.
Tamil Translation - Omar Sharifநிச்சயமாக அவர்கள் உங்களை அறிந்து கொண்டால் உங்களை ஏசுவார்கள்; (அல்லது, கொன்று விடுவார்கள்;) அல்லது, உங்களை தங்கள் மார்க்கத்திற்கு திருப்பி விடுவார்கள். அவ்வாறு நடந்துவிட்டால் ஒருபோதும் நீங்கள் வெற்றி பெறவே மாட்டீர்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi20. ஏனென்றால், (ஊர் மக்கள்) உங்களை (இன்னாரென) அறிந்து கொண்டால் நிச்சயமாக அவர்கள் உங்களை கல்லெறிந்து கொன்று விடுவார்கள்; அல்லது உங்களை தங்கள் மார்க்கத்தில் சேர்த்து விடுவார்கள். (அப்படி நீங்கள் சேர்ந்தாலோ) ஒரு காலத்திலும் நீங்கள் வெற்றிபெற மாட்டீர்கள்'' (என்றார்கள்).
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70