caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Israa அத்தியாயம், வசனம் 60

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 50 · 17:60

وَإِذْ قُلْنَا لَكَ إِنَّ رَبَّكَ أَحَاطَ بِٱلنَّاسِ وَمَا جَعَلْنَا ٱلرُّءْيَا ٱلَّتِىٓ أَرَيْنَٰكَ إِلَّا فِتْنَةً لِّلنَّاسِ وَٱلشَّجَرَةَ ٱلْمَلْعُونَةَ فِى ٱلْقُرْءَانِ وَنُخَوِّفُهُمْ فَمَا يَزِيدُهُمْ إِلَّا طُغْيَٰنًا كَبِيرًا

Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) “நிச்சயமாக உம் இறைவன் மனிதர்களைச் சூழ்ந்து கொண்டான்” என்று நாம் உமக்குக் கூறிய சமயத்தை நினைவு கூருவீராக! (எனவே எவரையும் நீர் அஞ்சாமல் மார்க்கத்தை எடுத்துக் கூறுவீராக!). உமக்கு நாம் (மிஃராஜ் பயணத்தில்) காண்பித்த காட்சியையும் குர்ஆனில் சபிக்கப்பட்ட மரத்தையும் மனிதர்களுக்கு சோதனையாகவே தவிர நாம் ஆக்கவில்லை. அவர்களைப் பயமுறுத்துகிறோம். அது அவர்களுக்கு பெரும் அட்டூழியத்தைத் தவிர அதிகப்படுத்துவதில்லை.
Tamil Translation - Omar Sharif(நபியே!) “நிச்சயமாக உம் இறைவன் (அறிவாலும் ஆற்றலாலும்) மனிதர்களைச் சூழ்ந்திருக்கிறான்” என்று நாம் உமக்குக் கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக! (எனவே எவரையும் நீர் அஞ்சாமல் மார்க்கத்தை எடுத்துக் கூறுவீராக!). (நபியே!) உமக்கு நாம் (மிஃராஜ் பயணத்தில்) காண்பித்த காட்சியையும் குர்ஆனில் (கூறப்பட்ட) சாபத்திற்குரிய மரத்தையும் மனிதர்களுக்கு சோதனையாகவே தவிர நாம் ஆக்கவில்லை. மேலும், அவர்களைப் பயமுறுத்துகிறோம். ஆனால், அது அவர்களுக்கு பெரும் அட்டூழியத்தைத் தவிர அதிகப்படுத்துவதில்லை.
Tamil Translation - Abdulhamid Baqawi60. (நபியே!) ‘‘உமது இறைவன் அம்மனிதர்களைச் சூழ்ந்துகொண்டான். (அவர்கள் உமக்குத் தீங்கிழைக்க முடியாது)'' என்று நாம் உமக்குக் கூறியதை கவனிப்பீராக. உமக்கு நாம் (மிஃராஜில்) காண்பித்த காட்சியும், சபிக்கப்பட்ட (கள்ளி) மரத்தை (அது மறுமையில் பாவிகளின் உணவென) குர்ஆனில் நாம் கூறியிருப்பதும் மனிதர்களை சோதிப்பதற்காகவே தவிர வேறில்லை. (நபியே! நம் வேதனையைப் பற்றி) நாம் அவர்களைப் பயமுறுத்துவது (அவர்களுடைய) பெரும் அட்டூழியத்தையே அவர்களுக்கு அதிகரிக்கச் செய்கிறது.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70