caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Israa அத்தியாயம், வசனம் 61

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 50 · 17:61

وَإِذْ قُلْنَا لِلْمَلَٰٓئِكَةِ ٱسْجُدُوا۟ لِـَٔادَمَ فَسَجَدُوٓا۟ إِلَّآ إِبْلِيسَ قَالَ ءَأَسْجُدُ لِمَنْ خَلَقْتَ طِينًا

Tamil Translation - Omar Sharif - Abridged Version“ஆதமுக்குச் சிரம் பணியுங்கள்” என வானவர்களுக்கு நாம் கூறிய சமயத்தை நினைவு கூருவீராக! இப்லீஸைத் தவிர (மற்ற அனைவரும்) சிரம் பணிந்தனர். “நீ மண்ணிலிருந்து படைத்தவருக்கு நான் சிரம் பணிவதா?” என்று (இப்லீஸ்) கூறினான்.
Tamil Translation - Omar Sharifமேலும், “ஆதமுக்குச் சிரம் பணியுங்கள்” என வானவர்களுக்கு நாம் கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக! ஆக, இப்லீஸைத் தவிர (அனைவரும்) சிரம் பணிந்தனர். அவன் கூறினான்: “நீ மண்ணிலிருந்து படைத்தவருக்கு நான் சிரம் பணிவேனா?”
Tamil Translation - Abdulhamid Baqawi61. வானவர்களை நோக்கி, ‘‘ஆதமுக்குச் சிரம் பணியுங்கள்'' என நாம் கூறிய சமயத்தில் இப்லீஸைத் தவிர (வானவர்கள் அனைவரும் அவருக்குச்) சிரம் பணிந்தார்கள். அவனோ ‘‘நீ மண்ணால் படைத்தவனுக்கு நான் சிரம் பணிவதா?'' என்று கேட்டான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70