caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Ibrahim அத்தியாயம், வசனம் 44

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 72 · 14:44

وَأَنذِرِ ٱلنَّاسَ يَوْمَ يَأْتِيهِمُ ٱلْعَذَابُ فَيَقُولُ ٱلَّذِينَ ظَلَمُوا۟ رَبَّنَآ أَخِّرْنَآ إِلَىٰٓ أَجَلٍ قَرِيبٍ نُّجِبْ دَعْوَتَكَ وَنَتَّبِعِ ٱلرُّسُلَ أَوَلَمْ تَكُونُوٓا۟ أَقْسَمْتُم مِّن قَبْلُ مَا لَكُم مِّن زَوَالٍ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) மக்களை, அவர்களுக்கு வேதனை வரும் ஒரு நாளைப் பற்றி எச்சரிப்பீராக! அநியாயக்காரர்கள் கூறுவர்: “எங்கள் இறைவா! சமீபமான ஒரு தவணை வரை எங்களை (இன்னும்) பிற்படுத்து! உன் அழைப்புக்கு பதிலளிப்போம்; தூதர்களைப் பின்பற்றுவோம்.” (இறைவன் கூறுவான்:) “உங்களுக்கு அழிவே இல்லை என்று இதற்கு முன்னர் நீங்கள் சத்தியம் செய்திருக்கவில்லையா?”
Tamil Translation - Omar Sharif(நபியே!) மேலும், மக்களை அவர்களுக்கு தண்டனை வரும் ஒரு நாளைப் பற்றி அச்சமூட்டி எச்சரிப்பீராக! ஆக, (அந்நாளில்) அநியாயக்காரர்கள் கூறுவார்கள்: “எங்கள் இறைவா! சமீபமான ஒரு தவணை (வரும்) வரை எங்களை (இன்னும்) பிற்படுத்து! நாங்கள் உன் அழைப்புக்கு பதிலளிப்போம்; இன்னும், தூதர்களைப் பின்பற்றுவோம்.” (இறைவன் கூறுவான்:) “உங்களுக்கு (உலகத்தில்) அழிவே இல்லை என்று இதற்கு முன்னர் நீங்கள் சத்தியம் செய்(து மறுமையை நம்பா)திருக்கவில்லையா?”
Tamil Translation - Abdulhamid Baqawi44. ஆகவே, (நபியே!) இத்தகைய வேதனை நாள் வருவதைப் பற்றி நீர் மனிதர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக. வரம்பு மீறியவர்கள் (அந்நாளில் தங்கள் இறைவனை நோக்கி) ‘‘எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு ஒரு சொற்பத் தவணையளி! நாங்கள் உன் அழைப்புக்கு (இனி) செவி கொடுத்து, (உன்) தூதரைப் பின்பற்றி நடப்போம்'' என்று கூறுவார்கள். (அதற்கு இறைவன் அவர்களை நோக்கி) ‘‘இதற்கு முன்னர் நீங்கள் உங்களுக்கு (இவ்வுலகில்) அழிவே இல்லை என்று சத்தியம் செய்து கூறிக் கொண்டிருக்கவில்லையா?'' (என்று கேட்பான்.)
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70