caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Ibrahim அத்தியாயம், வசனம் 45

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 72 · 14:45

وَسَكَنتُمْ فِى مَسَٰكِنِ ٱلَّذِينَ ظَلَمُوٓا۟ أَنفُسَهُمْ وَتَبَيَّنَ لَكُمْ كَيْفَ فَعَلْنَا بِهِمْ وَضَرَبْنَا لَكُمُ ٱلْأَمْثَالَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version“தமக்குத்தாமே தீங்கிழைத் தவர்களுடைய வசிப்பிடங்களில் (நீங்களும்) வசித்தீர்கள் (அல்லவா)? நாம் அவர்களுக்கு எப்படி செய்தோம் என்பது உங்களுக்கு தெளிவாக இருந்தது. உங்களுக்கு உதாரணங்களை விவரித்தோம்.”
Tamil Translation - Omar Sharif“இன்னும், நீங்கள் தங்களுக்கு தாமே தீங்கிழைத்தவர்களுடைய வசிப்பிடங்களில் வசித்துக் கொண்டிருந்தீர்கள் அல்லவா? மேலும், நாம் அவர்களுக்கு எப்படி செய்தோம் என்பது உங்களுக்கு தெளிவாக தெரிந்து இருந்தது. இன்னும், உங்களுக்கு உதாரணங்களை விவரித்தோம்.”
Tamil Translation - Abdulhamid Baqawi45. ‘‘தமக்குத்தாமே தீங்கிழைத்து(க் கொண்டு அழிந்து போனவர்கள்) வசித்திருந்த இடத்தில் நீங்களும் வசித்திருக்கவில்லையா? (என்றும்), நாம் அவர்களை என்ன செய்தோம் என்பது உங்களுக்கு நன்கு தெரிந்திருக்கவில்லையா? (இதைப் பற்றி) உங்களுக்குப் பல உதாரணங்களையும் நாம் எடுத்துக் கூறவில்லையா'' (என்றும் பதில் கூறுவான்.)
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70