وَلَمَّا فَتَحُوا۟ مَتَٰعَهُمْ وَجَدُوا۟ بِضَٰعَتَهُمْ رُدَّتْ إِلَيْهِمْ قَالُوا۟ يَٰٓأَبَانَا مَا نَبْغِى هَٰذِهِۦ بِضَٰعَتُنَا رُدَّتْ إِلَيْنَا وَنَمِيرُ أَهْلَنَا وَنَحْفَظُ أَخَانَا وَنَزْدَادُ كَيْلَ بَعِيرٍ ذَٰلِكَ كَيْلٌ يَسِيرٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் தங்கள் பொருளை திறந்தபோது தங்கள் கிரயம் தங்களிடம் திரும்பக் கொடுக்கப்பட்டுள்ளதைக் கண்டு “எங்கள் தந்தையே! நாம் (இதற்கு மேல்) என்ன தேடுகிறோம்? இதோ! நம் கிரய(மு)ம் நம்மிடமே திரும்பக் கொடுக்கப்பட்டுள்ளது. (தர்மமும் கிடைத்துள்ளது. ஆகவே புன்யாமீனையும் அழைத்துச் செல்ல அனுமதி தருவீராக!) நம் குடும்பத்திற்கு (தேவையான) தானியங்களைக் கொண்டு வருவோம். எங்கள் சகோதரனையும் காப்பாற்றுவோம். (அவருக்காக) ஓர் ஒட்டகத்தின் அளவையும் அதிகமாக்குவோம். இது (அவருக்கு) ஓர் இலகுவான அளவைதான்” என்று கூறினர்.
Tamil Translation - Omar Sharifமேலும், அவர்கள் தங்கள் மூட்டையை திறந்தபோது தங்கள் கிரயம் தங்களிடம் திரும்பக் கொடுக்கப்பட்டுள்ளதைக் கண்டு, “எங்கள் தந்தையே! நாம் (இதற்கு மேல்) என்ன தேடுகிறோம்? இதோ! நம் கிரய(மு)ம் நம்மிடமே திரும்பக் கொடுக்கப்பட்டுள்ளது. (உணவும் கிடைத்துள்ளது. ஆகவே புன்யாமீனையும் அழைத்துச் செல்ல அனுமதி தருவீராக!) நம் குடும்பத்திற்கு (தேவையான) தானியங்களைக் கொண்டு வருவோம். இன்னும், எங்கள் சகோதரனையும் பாதுகாப்பாக அழைத்து (சென்று, பாதுகாப்பாக அழைத்து) வருவோம். (அவருக்காக) ஓர் ஒட்டகத்தின் அளவையும் அதிகமாக வாங்கிவருவோம். இது (அதிபருக்கு) ஓர் இலகுவான அளவைதான்” என்று கூறினார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi65. பின்னர், அவர்கள் தங்கள் சாமான் மூட்டைகளை அவிழ்த்தபொழுது அவர்கள் (கிரயமாகக்) கொடுத்த பொருள்கள் (அனைத்தும்) அவர்களிடமே திருப்பப்பட்டு விட்டதைக் கண்டு ‘‘எங்கள் தந்தையே! நமக்கு வேண்டியதென்ன? (பொருள்தானே!) இதோ! நாம் (கிரயமாகக்) கொடுத்த பொருள்கள் நம்மிடமே திருப்பப்பட்டு விட்டன. (புன்யாமீனையும் அழைத்துச் செல்ல அனுமதி தாருங்கள்.) நம் குடும்பத்திற்கு வேண்டிய தானியங்களை வாங்கி வருவோம். எங்கள் சகோதரனையும் காப்பாற்றி வருவோம். (அவருக்காகவும்) ஓர் ஒட்டக (சுமை) தானியத்தை அதிகமாகவே கொண்டு வருவோம். (கொண்டு வந்திருக்கும்) இது வெகு சொற்ப தானியம்தான்'' என்று கூறினார்கள்.